சனி, 18 டிசம்பர், 2021

முகம் சுளிக்கா நட்பு

 அரசியல் விவாதங்கள் முடிந்தன

அவரவர் விருப்பத்தை பகிர்ந்தோம்
அலைகள் ஓய்ந்து அமைதியிப்போது
தலைகள் தத்தமது இல்லங்களில்
வேற்றுமையில் ஒற்றுமை நம்பண்பாடு
கூற்றுக்கள் வேறுபடலாம் கூட்டாளிகளே
நேற்று இன்று நாளை மாறும்
நேர்மை என்றும் வெல்லும்
நட்பு என்பது நல்ல உறவு
உட்புக வேண்டாம் பகைமை
என்றென்றும் அன்போடு வாழ்வோம்
மூதாதையர் கருத்து வேற்றுமை கொண்டிடினும்
முகம் சுளிக்கா நட்பு கொண்டனர்

கருத்துகள் இல்லை: