சனி, 18 டிசம்பர், 2021

வர்ணங்கள்

 மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா ஆண்டவன் படைத்தானா

மறுபிறவி எடுத்தானா மாண்டவன் மறுபடி பிறந்தானா
தோண்டிப் பார்க்க அகழ்வு ஆராய்ச்சி உண்டா
தோன்றிய நாளில் வர்ணங்கள் வகையறிதல் உண்டா
யாரிந்த உயர்வு தாழ்வு படைத்த பிரம்மா
வேரில்லா மரமாய் உயர்ந்தது யாராலே தெரியலியே
பாருக்குள்ளே பழைமையான நாகரிகம் எமதென்றே சொல்வோம்
ஊருக்குள்ளே மனிதனை மனிதனே வேற்றுமை காண்போம்
இரத்தத்தின் நிறம் சிவப்பே ஆறடி நிலமே
இறந்த பின்னாலே இருப்பதில்லை் சேர்த்த பணமும்
மதங்கள் சாதிகள் மனதின் கழிவுச் சாக்கடை
மனிதர்கள் சாக்கடை வீட்டிலே சங்கீதம் பாடினர்
நல்லவை என்றும் மனதில் பதிவதே இல்லை
அல்லவை தேய ஆயிரம் ஆண்டுகள் தேவையோ ?

கருத்துகள் இல்லை: