சனி, 18 டிசம்பர், 2021

பாட்டு கேட்டுச்சா

 காணக் கிடைக்கலியே காத தூரம் போனாயே

காத்து வாக்குலே காதுலேதான் போட்டு வைக்கேன்
வீட்டு முத்தத்துலே போட்டு வச்ச புடவையிலே
காட்டுச் சிறுக்கி காதலத்தான் கலந்து வச்சே
அப்பனுக்குத் தெரியாம அதிகாலை வேளையிலே அடியே
அம்மனத்தான் பாக்கணுமுன்னு நினச்சாயே அவனோட
என்ன ஆச்சுதடி எதிர்பாத்து காத்து நின்றான்
சொன்ன வார்த்தைய ஏனோ காப்பாத்த முடியலியோ
மேற்குப் பக்கமா வண்டியிலே போனாயோ உசுரோட
மேடு பள்ளமெல்லாம் என் பாட்டு கேட்டுச்சா
மலைக் காத்து வீசுற பக்கம் இருக்காயோ
மனசு கிடந்து தவிக்குதடி தாங்கன அடியயெண்ணி
ஏடி உன்ன பாக்க ஓடம் ஏறி வரவோநான்
கூடி கைகோத்து மலயுச்சி போய் சேர்வோம் !

கருத்துகள் இல்லை: