சனி, 18 டிசம்பர், 2021

காலைப் பொழுது

 புத்தம் புதுக் காலை புதிய ராகம்

நித்தம் தாளம் நினைவை மயக்கும் பாடல்
சத்தம் இல்லாத அமைதி சந்தம் சேர்க்க
கத்தும் குயிலின் குரலோ காதுக்கு இனிமை
பத்தும் மனதில் காட்சியாகும் நினைவு அலைகள்
நித்திரை துறந்த விடியல் காற்றின் சுகம்
முத்திரை பதிக்கவே வந்த கதிரவன் கதிர்கள்
சித்திரை வெயில் தாக்கம் மறைந்த குளிர்காற்று
எத்தனை சுகம் இந்த காலைப் பொழுது
என்னோடு உறவாடி கவிதைகள் படைக்க வந்தது

கருத்துகள் இல்லை: