சனி, 18 டிசம்பர், 2021

மாறிப் போயிற்று

 புள்ளி வச்சு கோலம் போட்ட காலமுண்டு

சுள்ளி வச்சு அடுப்பெரிச்ச காலமதுவே
பள்ளி போக பலமைல்கள் நடந்த காலம்
வெள்ளி என்றால் புனித நாளாய்
பள்ளம் மேடாய் வாழ்வில் பணிவுண்டு
உள்ளம் உயர்வான பண்பும் உண்டு
கள்ளம் மெதுவாய் நுழைந்த காரணத்தால்
எல்லாமே மாறிப் போயிற்று உலகி்ல்
சொல்லில் உண்மை மறைந்து பொய்மை
பணத்தின் பின்னே மனிதம் அனைத்தும்
பகட்டு வாழ்க்கை பதவி மோகம்
பேதங்கள் பெருகி வீண்வாதங்கள் எங்கும்
பேச்சில் வன்மம் பேராசை மனதில்
ஏக்கம் உண்டு ஏனிந்த மாற்றம்
போக்கும் வழியின்றி போகின்ற நாட்கள் !

கருத்துகள் இல்லை: