சனி, 18 டிசம்பர், 2021

பொய்க்கால் குதிர

 ஓடுற தண்ணியிலே ஓடிக் குதிச்ச காலம் போச்சு

பாடுற குயிலோட பாடிய குரலும் இப்ப இல்ல
ஆடுற பொய்க்கால் குதிர பதுங்குற புலி வேஷம்
தேடுற கண்ணாமூச்சி ஆட்டம் பல்லாங்குழி கோலாட்டம் மறஞ்சுபோச்சு
ஆத்துல மணல் இருக்கு அதன்மேலே செடிங்க இருக்கு
நாத்து நட்ட இடம் காணலே கடத்தெரு ஆச்சு
மரங்க மறஞ்சு மாடிவீடு தார்ரோடு அடுக்குமாடி ஆகிடுச்சு
மலைங்க கறஞ்சு கருங்கல்லா கட்டிடமா மண்ணாகிப் போச்சு
நல்ல மனுசங்க மனசில்ல நச்சு எண்ணமே இப்ப
பொல்லாத செயல் நிறஞ்சு பொருள் சேக்கவே கூட்டம்
வறுமை ஒழியலே வானளாவ கட்டிடங்க வளந்து போச்சு
பொறுமை இல்ல பொசுக்குன்னா கோவம் மனுசன் மனசுலே
மாத்தம் வந்துச்சு மருந்து வந்துச்சு நோயும் கூடவே
குத்தம் யாரச் சொல்ல நீயும் நானும் தானே !

கருத்துகள் இல்லை: