சனி, 18 டிசம்பர், 2021

ஓடும் காவேரி

 சுற்றி வர சுற்றமுடன் சுற்றுலா

பற்றிய ஆசையினால் பயணம் படகில்
நிற்கும் மனதில் நினைவுகள் இனிமையாய்
நில்லாமல் ஓடும் காவேரியின் அழகு
இன்னும் சிறுவனாய் இதயத்தில் ஆர்வம்
இயற்கை அழகே இங்கேதான் அமைதி
எத்தனை வகையான பறவைக் கூட்டம்
சித்தம் ஈர்க்கும் சூழ்நிலை பசுமை
அகண்ட காவேரி ஆர்ப்பரிக்கும் அருவியாய்
சுகமான தூய்மைக் காற்றுடன் உறவோடு

கருத்துகள் இல்லை: