சனி, 18 டிசம்பர், 2021

கல்லூரிச் சாலை

 கூடி நின்னு கைதட்டி பாட்டுப் பாடி

ஆடி கூத்தாடி ஆட்டம் போட்டு நண்பா
கோடி கொடுத்தாலும் வாராது அந்த நாட்கள்
சோடி ஒண்ணு தேடி தெருத்தெருவா சுத்தி
வாடிய முகத்தோட தாடி வளர்த்த நாட்கள்
கல்லூரிச் சாலையில் மரத்து நிழலிலே அரட்டை அடிச்சு
கற்பனைக்கு எட்டாத கதைகள் பேசி கைகொட்டி
நகைத்த நகைப்பெல்லாம் நினைவுலே இருக்குதா நண்பா
புகைக்க கத்துகிட்ட கேன்டீன் வாசலுக்கு போவோமா
காப்பி வாங்க காசில்லாம ஆளுக்கொரு பங்கா
காசைச் சேத்ததுவும் ஞாபகம் இருக்கா உனக்கு
விவேகானந்தர் அரங்குலே உமா ரமணன் பாட்டுக்கு
விட்டாயே காத்தாடி நூலே அறுக்காம பறந்ததே
விளையாட்டு மைதானம் மெஸ் வாசல் கூடிநின்னு
வீண்பேச்சு பேசி் விலை கொடுத்து வம்புவாங்கி
வீரம் காட்டி கைகலப்பான அந்த நாட்கள்
படிக்க நேரமில்லே ஆனா சீட்டாட நேரமுண்டு
பகல் காட்சி பாக்க பட்டணத்து தியேட்டர்கள்
கட்டடிச்சு கும்மாளம் போட்டு பிட்டடிச்ச தேர்வு நாட்கள்
கலையாத பழைய நினைவுகள் திரும்பக் கிடைக்குமா ?

கருத்துகள் இல்லை: