சனி, 18 டிசம்பர், 2021

காலத்தே பயிர் செய்

 காலத்தே பயிர் செய்ய கழனிக் காட்டிலே

கோலத்தான் உயர்த்தி ஏரோட்டிப் போறானே என்னப்பன்
கொளுத்தும் வெயிலானாலும் கொட்டுகின்ற மழையானாலும் ஓய்வில்லை
கொட்டடி விட்டு காளைகளைப் பூட்டி ஏரோட்ட
கருக்கலில் போனவனே கஞ்சிக்கு மிளகாயை கடிச்சுக்கடா
கறுத்த உன்தேகம் வைரமா மின்னுதடா ராசா
உழைப்பு உன்னோடது ஊருக்கு படியளக்கப் பிறந்தவனே
உழுத உன்வயலில் நெற்பயிர் விளைஞ்சாலே பசியாறும்
நகரத்து தெருக்களிலே நாகரிகம் நடைபோட காரணமேநீயே
நகைப்பு அவருக்கு நல்வாழ்க்கை உன்னாலே மறவாதே !

கருத்துகள் இல்லை: