சனி, 18 டிசம்பர், 2021

இணைந்து செல்வோம்

 வண்ணங்கள் ஆயிரம் உலகம் மிகப்பெரிது

எண்ணங்கள் நல்லவை எழுந்து புறப்படு
கடலாடும் நகரங்கள் பலப்பல காண்போம்
நடமாடும் நங்கையர் நளினமும் இரசிப்போம்
ஆறுகள் வளைந்து நாற்புறம் செல்லும்
ஆறுதல் மனதில் அதனழகு காண்பது
மலைகளின் பசுமை மலைக்க வைக்கும்
கலைஞனின் கற்பனை ஊற்றைத் தூண்டும்
இன்றே செய்க எதையும் இனிதாகும்
நன்றாய் நட்பே நமதுடன் வரட்டும்
எல்லைகள் கடந்து எங்கும் செல்வோம்
தொல்லைகள் மறந்து சிறுவர்கள் ஆவோம்
வாலிபம் இன்னும் வயதில் உள்ளது
வானத்தில் பறந்து பூமியைக் காண்போம்
இப்போது இல்லை் எனில் எப்போது
இணைந்து செல்வோம் உலாவி வருவோம் !

கருத்துகள் இல்லை: