சனி, 25 ஜூலை, 2020

கிராமத்து வாசனை

மரப்பாச்சி பொம்மையும் மூணு சக்கர மரவண்டியும்
வீடு முச்சூடும் களிமண் பொம்மைகளும் பாத்திரங்களும்
செம்மறியாட்டுப் பாலும் நேத்து தோயவச்ச தயிரும்
கூழ்ப் பானையில புளிச்ச தயிரோட வேர்க்கடலையும்
தேக்கு இலையில கத்தரிக்கா சாம்பாரோட சாதமும்
காட்டு மாங்கா பத்தை காரமா ஊறுகாயும்
தேங்கா புண்ணாக்கும் வெல்லமும் பொறிவிளங்கா உருண்டயும்
சிகப்பு பச்சரிசி வெல்லப் பாகு கலந்தும்
அவிச்ச வேர்க்கடலை வறுத்த கடலை கருப்பட்டி
பனமரத்து நுங்கு தென்னை இளநீர் கொடுக்காப்புளி
விரால் மீனும் பச்ச மிளகாய் உப்பும்
பச்சரிசி மாங்கா ஈச்சம்பழம் சீதாப் பழம்
கிராமத்து வாசனையே கண் முன்னே நிக்குதய்யா
சிறுவனா திரும்பிப் போக ஏதேனும் வழியுண்டா ?

தந்தையர் தினம்

அப்பாக்கள் தம் மக்களுக்காக தவமிருப்பர்
தப்பாமல் பாசமழை இறுதிவரை பொழிந்திடுவர்
அன்பான சொல்லும் அரவணைப்பும் உண்டு
பண்பாக வளர்க்க கடுஞ்சொல்லும் உண்டு
கப்பலின் மாலுமி போன்றே அவரும்
கடல்சீற்றம் தவிர்த்து கரைசென்று சேர்ப்பார்
உழைப்பது இறுதிவரை உயர்வான வாழ்விற்கு
பிழைப்பே சிலநேரம் பெரும்பாடாய் ஆவதுண்டு
அம்மாவும் அப்பாவும் ஆணிவேர்கள் என்றும்
அவரின்றி ஏதிங்கு குடும்பமெனும் கோயில் !
தந்தையர் தின வாழ்த்துகள் அனைவர்க்கும்!!

இளமை முதுமை

அந்தியிலே கைகோர்த்து உன்னோடு கடல்மணலில்
அதிகாலை அருவிக் கரையில் உன்னருகில்
பனிப்போர்வை மலைமீது குளிர்நீக்க உன்அணைப்பில்
பள்ளத்தில் ஓடுமந்த குளிர்நீரில் கரமேந்தி
புல்வெளிப் போர்வையில் முதுகில் சுமந்து
மலர்வனத்தில் புன்னகை பூக்கும் உன்முகத்தில்
மலர்ந்த முகத்தில் உதிர்க்கும் சிரிப்பில்
என்னையே நானிழந்து உன்னோடு இணைந்த
எத்தனை தருணங்கள் எங்கேயவை தேடிநின்றேன்
இளமை திரும்பாதோ இனிய நாட்களும்தான்
முதுமை என்றதொரு பருவம் வேண்டாமே !

மழலை மொழி

பெற்றவள் தாலாட்டுப் பாடினாளோ
சுற்றமும் சூழ்ந்துனைக் கொஞ்சினரோ
முற்றத்துக் குருவியைக் கண்டாயோ
கொற்றவளே கொஞ்சு மொழியோளே
நற்றமிழ் நாவினில் பிரளுமோ
பொற்கொடி இடையினில் தவழுமோ
பொக்கைவாய் திறந்து சிரித்திட
சிரிக்கும் சித்திரமே சிங்காரியே
பூரிக்கும் கண்களிலே நீர்முத்து
மெல்லநடை போட்டு வருவாயா
மெல்லிய விரல்பற்றி நடப்போமா
மழலை மொழியினிலே அழைப்பாயா
மகளே உனக்காகக் காத்திருப்பேன் !

நதியே கடல் சேர்வதெப்போது

பனியுருகி பாதை விரிந்து ஓடுகின்ற நதியே
வளைந்து நெளிந்து கரைபுரண்டு கடல் சேர்வதெப்போது
வருகின்ற வழிதோறும் என்னென்ன கண்டாய் சொல்வாயா
மலையரசி கண்டாளா கனியமுது காய்கறிகள் தந்தாளா
மண்ணோடு உறவாடி மதகுகடந்து ஏனிந்த வேகம்
கானகத்து மரவேரும் உனைத் தழுவக் கண்டேன்
கரையோரப் புல்லும் வளைந்து உறவாடக் கண்ணுற்றேன்
மீன்கள் துள்ளி விளையாடி நீந்தக் கண்டேன்
மீன்கொத்திப் பறவையதோ இறைதேடி பாய்ந்தது உன்னுள்ளே
சிறியோரும் பெரியோரும் பெண்டிரும் நீராடிக் களித்தாரே
சித்திரை கடந்து ஆடிப்பெருக்கில. அலங்கரித்து மகிழ்ந்தாரே
கடலோரம் நானோ உன்வரவு நோக்கிக் காத்திருப்பேன்
காலம் கடத்தாமல் வந்திங்கு சேர்வாயா விரைவில் !

விடியலின் கனவு

அருகில் வந்தாள் உரசி நின்றாள்
அவளது விரல்களோடு எனது விரல்களும்
கண்களுக்குள் எதையோ தேடிப் பார்த்தாள்
கண்மூடி சிலநொடிகள் மௌனித்து இருந்தாள்
அழகாய்ப் புன்னகைத்து விரல் சொடுக்கினாள்
பழகிய நாட்கள் பலவென்று சொன்னாள்
புரியாத மயக்கத்தில் பார்த்து நின்றேன்
தெரியாதா நானென்று உமக்கு நகைத்தாள்
ஏனிந்தத் தயக்கம் என்னிடத்தே என்றாள்
ஏனோ எனக்கு வார்த்தைகள் வரவில்லை
அவளைக் காண்பதே சுகமாய்க் கண்டேன்
பாவமாய்ப் பார்வை படர விட்டாள்
மடிமீது தலைவைத்து முகம் நோக்கினாள்
நொடியது மாறாத நிலையில் நான்
இமைகள் திறந்த நேரமதில் அறிந்தேன்
இதுவும் இன்னொரு விடியலின் கனவென்று

நெடுங்கதை - 2

அத்தியாயம்-2
கிராமம் உறக்கத்திலிருந்து விழிக்காத காலைப்பொழுது. சூரியன் மெதுவாக மலை உச்சியிலிருந்து எட்டிப் பார்க்கிறான்.
சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்தக் கிராமத்தில் நூறு குடும்பங்ஙளுக்கும் மிகாத வீடுகள். குடிசைகளாய் இருந்தவை இரண்டு அல்லது மூன்று அறை வீடுகளாகவும் மற்றவை சற்றே பெரிதான மாடி வீடுகளாகவும்.
ஊருக்குள் இன்றும் தார்ச்சாலையில்லை. பேருந்துகள் எல்லையோடு திரும்பி விடும். வானம் பார்த்த பூமியாதலால் பெரும்பாலும் புன்செய்ப் பயிர்கள். நெல்லும் வாழையும் சில மாதங்களில்.
நமது நாயகி பொம்மாயியும் நாயகன் குப்பனும் உறங்கிக் கொண்டிருப்பதால் நாம் ஊரைச் சுற்றிப் பார்க்கிறோம். குப்பனின் தந்தை மாடுகளைப் பூட்டி கிணற்றில் இருந்து கத்தரிக்காய் தோட்டத்திற்கும் சேப்பங்கிழங்கு தோட்டத்திற்கும் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
கிராமத்துத் தெருக்கள் சாணமிட்ட பரப்பில் புள்ளி வைத்த கோலங்களுடன். விடியாத காலையிலே பெண்களுக்கு முதல் வேலை அதுவே.
கிராமப் பெண்கள் தங்கள் காலைக் கடன்களை முடித்து அன்றைய நாளை ஆரம்பித்து வைப்பர்.
செம்மறி ஆடுகள் பட்டிக்குள். கறவை மாடுகள், காளை மாடுகள் தொழுவத்தில். சாணமும் மூத்திரமும் கலந்த வாசனை எப்போதும்.
ஏரிக்கரையில் சில பெண்கள் துணி துவைக்கும் சத்தமும் சிலர் மார்போடு கட்டிய உள்ளாடையுடன் குளியலும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் ஊர்க்கதைகளும் கலந்திருக்கும்.
தென்னந்தோப்பு ஊர் எல்லையில் குப்பனின் ஒன்று விட்ட மாமனுடையது. அதனூடே பெரிய கிணறு படிக்கட்டுகளுடன். குப்பன் நீச்சல் கற்றுக கொண்டதும் தினமும் குளியலும் இங்கேதான்.
ஊரே பச்சையாகச் காட்சியளித்துக் கொண்டிருந்தது. வயல்களைச் சுற்றி பனைமரங்கள். கிராமத்துத் தெரு முனையில் டீக்கடை. சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது.
பல் விளக்கி விட்டீர்களா. வாருங்கள் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிடுவோம்.
(தொடரலாம்)

மஞ்சள் நிறத்தவன்

வஞ்சகன் அவன் மஞ்சள் நிறத்தவன்
வளைக்கப் பார்க்கிறான் வாலாட்டிப் பார்க்கிறான்
உயிரோடு விளையாடும் உன்மத்த எதிரியே
உனக்கேன் இந்த மண்ணின் ஆசை
கொன்றது போதாதா கொடிய கிருமியால்
வென்றது நீயல்ல நரியின் தந்திரம்
விலகிச் சென்று விடு வேண்டாம்
வீரர் எம்மவர் வெட்டிச் சாய்ப்பர்
போரொன்று வந்தால் பொசுங்கிப் போவாய்
ஆடிய ஆட்டம் போதும் அடங்கு
ஆக்கிரமிப்பு வேண்டாம் அமைதி கொள்
பெரிய மலையும் பொடியாய் போகும்
பேரிடி தலையில் விழுந்து அழிவாய் !

Yancheng - 1

Feb 2005, Apr 2005 and June 2005 I made three trips official as L & T Projects division AGM, under Industrial Valves division
This particular write up is about visit to Yancheng in China which is approx 310 Kms from Shanghai. Always Shanghai used to be kind of centre point for official travel.
L&T has a office too here. Shanghai has old and New city just like our Hyderabad and Secunderabad. City looks like any western country city with multistorey buildings and Huang pu river.Its visual treat for eyes to travel during nights all buildings lighted up like in developed countries. OK lets get out of Shanghai and you can be seated in the car as I am travelling alone except the driver.
This was in June 2005, Early morning got up and got ready by 6am, the driver already in reception waiting for me. Most of road travels will start early morning sometimes even at 4am. Chinese will be ready before us, as they don't take bath in the morning, only night times.
The travel is going to take approx four hours the driver said. Anywhere by road we can easily cover 80 kms per hour in China basically, most of the highways are high-rise and exit points only in important cities en route.
As the car was travelling at higher speeds the driver kept on talking to me, he is already friendly with me, as this is my third trip and most of the times, he used to take me around. I remember his name as Tsu pronounced Su.
He used to speak fairly good English. As we were travelling, I found the village sides are similar to India and fields mostly on both sides of high rise roads.
In China except in between few cities we need to travel by road and preferably by Car. Han Jian Rong has become my friend by this time, he supplies Valves to L&T, also has many contacts with foundries in China.During the months I visited the temperature used to be between 23 and 27 deg C.
(To continue)

உறுதி வேண்டும்

உள்ளம் தூய்மை என்றால் உயர்ந்த மனமிருக்கும்
உண்மை அன்பு இருந்தால் பாசம் மிகும்
கள்ளமில்லா நெஞ்சினில் கருணை நிறைந்து இருக்கும்
கற்றவை கேட்டவை நல்லவை ஆதலின் நலமே
பெற்றவர் பேணுதல் தெய்வம் தொழுதற்குச் சமம்
சுற்றமும் நட்பும் சூழ்ந்த வாழ்க்கை பெரும் பேறு
சொல்வதும் செய்வதும் சுகப்பட வைப்பதும் நன்று
செல்வம் சேர்வது வறியவர் வளம்பெறச் செய்யவே
சோதனை வருங்கால் சோர்ந்து போகாத மனம்
சாதனை இவையே வேறெது தேவை வாழ்வினில்
தண்ணீரில் மிதந்தும் தாமரை இலை போலே
கண்ணீர் சொரியாத உள்மனம் உறுதி வேண்டும் !

உறவுகள்

ஆணிவேராய் ஆழமாய்ச் சில உறவுகள்
ஆலமர விழுதுகளாய்ச் சில உறவுகள்
தாமரை இலைநீராய்ச் சில உறவுகள்
தாலாட்டிப் பாலூட்டும் தாய்மை உறவுகள்
பயணப் பாதையில் முடியும் உறவுகள்
கல்விச் சாலையிலே சேர்ந்த உறவுகள்
காதல் மணம் சேரும் உறவுகள்
குலவிக் கலப்பதால் உதிர உறவுகள்
குடும்ப விளக்கேற்ற துணையாய் உறவுகள்
கணக்கில்லா உறவிருந்தும் தனக்கில்லை இதுவென்று
சுணக்கம் கொள்ளும் நாளொன்று வருவதேன்
சக்கரச் சுழற்சியில் தனிவழிப் பாதையுண்டு
சிக்காதோர் அதனில் பெரியோர் ஆவார் !

கர்ம வீரர்

சமுதாயத்தில் என்றோ வரும் வால்நட்சத்திரம்
சமதர்மம் போதித்து ஓய்ந்து உறங்குகிறது
தனக்கென வாழா தனிப்பெரும் தலைமை
உனக்கென உழைத்த கருப்பு வைரம்
கல்வியறிவு தேவையற்ற செயல்வீரர் சோர்விலார்
கர்மவீரர் மக்களின் பெருந் தலைவர்
மறுமுறை பிறந்து வருவாரோ மாநிலத்தே
மயங்கிக் கிடக்கும் மனிதரை துயிலெழுப்ப !

எங்கே மறைந்தாயோ

எப்போதும் ஏனோ கண்ணாமூச்சி
என்னோடு விளையாட இதுவாநேரம்
கண்மூடித் திறந்தாலே காண்கிலையே
கண்ணோடு நீர்த்திவலை கற்கண்டோ
உருகித் தலைசாய்த்து ஒருநாளும்
உதாசீனப் படுத்தி மறுநாளும்
உன்னைப் புரிதற்கே இயலாதோ
என்னைப் பார்க்கத் தோணலியோ
முகில் விலகியதும் நிலவுதோன்றும்
துகில் தழுவும் தென்றல் வீசும்
பகலவன் தோன்ற இருள்அகலும்
எங்கே மறைந்தாயோ நானறியேன்
எத்திசை சென்றாயோ அதனையறியேன்
பற்றும் கரம்தேடிப் பார்த்திருப்பேன்
பறந்தோடி வந்தென்னைச் சேர்வாயா ?

ஒண்ணும் புரியலே

காகிதத்துலே எழுதப் போனா மையக் காணலே
காவியத்த எழுதப் போனா கருவைக் காணலே
ஓவியத்த எழுதப் போனா வண்ணம் காணலே
ஓலையிலே எழுதப் போனா ஆணியைக் காணலே
மண்ணிலே எழுதப் போனா சொல்லைக் காணலே
மனசுக்குள்ளே எழுதப் போனா அவளக் காணலே
என்ன சொல்லி நானெழுத ஒண்ணும் புரியலே
சொன்னதே திரும்பச் சொல்ல கிளியும் காணலே
நல்ல தமிழ் பாட்டெழுத கருத்தும் தோணலே
மெல்ல வரும் கற்பனையும் இன்று காணலே
என்ன பாட்டு நானெழுத எதுவும் புரியலே
சொன்னதையே திரும்பச் சொன்னா குத்தம் ஆகுமே !

Yancheng

(Cont'd...)
After travelling for three and half hours the driver took a detour from the highway and got into smaller province road. Around 10 am we reached the Yancheng Valves Factory.
As the communication reached them earlier about my visit, Top Managers were ready to receive me. The visit is for inspection of their facilities and quality standards being followed in the manufacturing areas. L&T wanted to set up a Joint Venture in China, mainly for Gate,Globe and check valves which had huge demand in the international market.
We could not compete in the international market as our prices were high comparatively. Manufacturing in China had minimum of 15% price advantage. But to maintain good quality levels we need to find a JV partner who has high quality standards of manufacturing.
After preliminary introduction, the shop visit started. There was a separate Ball valves manufacturing line to export it to US. The area clearly earmarked. Obviously they did not take me inside as we being one of the competitors in the products being manufactured.
They took me around areas where GGC (Gate,Globe,Check) valve components are machined,then the Quality room, lab, documentation all that. I was impressed, but did not express anything at that point of time.
It was lunch time by the time we finished inspection of facilities. As I was already familiar the type of food available I settled with some greens, groundnut, Fish boiled& salted, Fruit juice, Egg burji etc.,small qty of rice mixed with egg burji. By this visit I have even stopped drinks (Alcohol), I consumed lot of fruit juices.
After lunch they took me to a open undeveloped area. I could see all along the drive medians planted with fully grown flower plants, replanted and watered, Fully grown trees wound with raw hay ropes to four feet and watered. When I enquired they said this is how cities with clean environment developed faster in China. Many such cities are developed in collaboration with a Singapore Agency. I remembered about Suzhou visit during my first visit a beautiful city developed recently even a lake artificially created.
We reached the place where supposed to be a factory of JV will be built up. A barren land was shown which was clear flat ground ready to construct factory. Took photographs and returned.
After thanking them for the kind courtesy extended left their factory and went to a steel casting foundry. That's again to evaluate.
But this time I was terribly disappointed, though foundry had good manufacturing set up the quality of castings, traceability, documentation all in poor shape. They had ISO certificate for name sake, I realised the certificate is not enough to approve a manufacturing set up.
Mentally made up my mind that this won't suit us I left for another visit to an Investment Casting foundry.
There again the process followed was not to the expected level. I have seen people working in Zircon coating area with lot of chemical smell without wearing masks. Many women were working but no separate changing rooms. To my surprise like men they were casually changing dress in the adjacent room after the shift is over which had no doors.
I would share more on this when I write about my Wenzhou visit. We left around 4 30 and reached Shanghai late night. I thanked Su and he left. Generally the Chinese do not accept tips.
(End of Chapter)

எல்லை காக்கும் வீரர்

எல்லைகள் காத்து நிற்கும் சகோதரரே
தொல்லைகள் பலவும் தினம் உமக்கு
சுற்றம் நட்பு துறந்து தூரத்தே
பெற்ற குழந்தை உற்ற மனைவி
யாவரும் இங்கிருக்க பனியிலும் வெயிலிலும்
காடு மலை கரடுமுரடான பாதை
கடந்து செல்லும் உம்மைப் போற்றிடுவோம்
நாட்டுப் பற்று மக்கள் நலன்
நாடி நரம்பினிலே நல்லோர் நீவிர்
பயமற்று நாட்டினர் தம்மூரில் இருக்க
பயமில்லா வீரம் உள்ளத்து உரமோடு
காவலரே கரம்கூப்பி் நன்றி சொல்வோம்
உம்மோடு எம்உணர்வு துணையாய் நிற்கும்
உளமார உமைப் போற்றி வணங்கிடுவோம் !

கிருமி

உன்னோடு வாழ்ந்திருக்க நீயென்ன காதலியா
உன்னை வெறுக்கிறேன் விலகியிரு நெருங்காதே
கண்ணுக்குத் தெரியா கபட தாரியே
கண்டாலே பொசுக்கிடுவேன் கண்முன் வாராதே
என்னூரில் என்நாட்டில் உனக்கென்ன வேலை
எட்டிப்போ எங்காவது தொலைந்து போய்விடு
வேண்டாத விருந்தாய் ஏனிங்கு வந்தாய்
வேதனையே உன்னால் உறவினர் மனமெல்லாம்
பிறந்த வீட்டுக்கே திரும்பப் போய்விடு
இறந்தனர் பலரும் உன்னைத் தழுவியதால்
இறைவனும் உனைக்காண உள்ளம் கொண்டானில்லை
இவ்வுலகம் உய்யட்டும் விலகிச் சென்றுவிடு !

நெடுங்கதை - 1

நெடுங்கதை ஒன்று மனதிலே தோன்றியது. உண்மையும் பொய்யும் கலந்த காதல் கதை. பல அத்தியாயங்கள் வரலாம்,அனைவருக்கும் பிடித்திருந்தால். இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம்.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கதையின் ஆரம்பம். 2005ம் ஆண்டு.
கதையின் நாயகன் ஆதவன், வயது 28. நாயகி தாமரை, வயது 23.
ஆதவன் படித்தது பொறியியல் மற்றும் எம் பி ஏ, ஒரு மிகப் பெரும் கம்பெனியில் உகவி மேலாளர் தாமரை பி எஸ் சி ( சைக்காலஜி), நடுத்தர கம்பெனியில் எ
ச். ஆர். பிரிவில் எக்ஸிகியூடிவ் ட்ரெயினி.
ஆதவன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலே தாயைப் பறி கொடுத்தவன் தங்கைக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது. சென்னை வாசி.
தாமரையின் குடும்பமும் நடுத்தரம், ஆனால் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள். இரு அண்ணன்களுக்குத் திருமணமாகி இருந்தது. இவள் மும்பை வாசி். மாதுங்காவில் இவர்கள் குடும்பம். இப்போது வீட்டில் ஒரு அண்ணன்,அவன் மனைவி,ஒரு தங்கை. மற்ற அனைவரும் வெவ்வேறு ஊர்களில். தேவைப்பட்டால் கதையில் நுழைவர்.
வாழ்க்கையில் சாதிக்கத் துடித்த இவர்களோடு விதியும் பயணித்தது.
(வளருமா ?)

மோகினி வருவாளோ ?

(எவ்வளோ தான் சமுதாயத்த பாடறது
அது மாறலே அதான் நான் மாறிட்டேன்
காதலி வருவா சொல்லி அனுப்பும் கவிஞரே)
விழித்துப் பார்த்தேன் இன்னொரு விடியல்
ஆதவன் கதி்ர்கள் அறைகள் எங்கும்
தூரத்தே குயிலின் கூவல் இதமாய்
படுக்கை மட்டு்ம் கசந்தது ஏனோ
இரவுப் பாட்டு நடுநிசி முடிந்தது
உறவைத் தேடிய மெல்லிய ராகமாய்
உள்ளத்தின் வெப்பம் உடலிலும் காண்கிறேன்
தென்றல் வந்து தோளைத் தழுவுமோ
பூங்காற்று நாசித் துவாரத்தே சேருமா
கேள்விகளோடே நாளும் பிறந்தது இன்று
நாளையும் வரும் நாளொன்று பிறக்கும்
விடைகள் காணாமலே மாலையும் மலரும்
மோகனம் பாடிட மோகினி வருவாளோ ?

தாமரைத்தோட்டம் பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் எட்டு

வாழ்க்கையில் துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறி வருவது இயற்கை. அனைவருக்கும் பொருந்தும். வெவ்வேறு கால கட்டங்கள் வெவ்வேறு அனுபவங்கள்.
சுமார் ஆறு மாதம் சைக்கிள்ளே கல்லூரிக்கு சென்றது நினைவில் வருகிறது.கீழ்பாக்கம் டூ கிண்டி பொறியியல் கல்லூரி. பொதுவா என் கிட்டே காசே இருக்காது. அப்படி ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆகி அப்பா வேலைல இருந்த மவுண்ட்ரோடு ஸ்பென்ஸர் எதிர்லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் வரை தள்ளிக் கொண்டு வந்தது பசுமையா ஞாபகத்துல இருக்கு.
நான்காவது ஐந்தாவது வருஷப் பீஸ் மத்த செலவுக்கு அப்பா கொடுக்கறத நிறுத்திட்டார், எதிர் வீட்டு நடராஜன் உதவி செஞ்சாருன்றத வேற கட்டுரைகள்ளே சொல்லி இருக்கேன்..
அதே போல முதல் காதல் பத்தியும் வேற கட்டுரைகள்ளே சொல்லியிருக்கேன். இதே கால கட்டத்துலே தான் கல்லூரி நண்பர்கள் போலவே காலனி நண்பர்கள் பலரும் உதவியும் செஞ்சு இருக்காங்க.
சம்பந்தம், இராஜேந்திரன்,அந்தோணி,அஷோக்,இரவி அம்மா, சம்பந்தம் குடும்பம், நடராஜன் குடும்பம்னு பலரும் ஏதாவது வகைல உதவி இருக்காங்க. இவங்க எல்லாருமே பாகுபாடின்றி குடும்பத்துலே ஒருத்தனா மதிச்சாங்க. அம்மா இல்லாத குறை தெரியாம காலம் போச்சு.
சின்னக் குழந்தைங்க அண்ணானு கூப்பிட்டுக் கிட்டு ஒரு பெருங்கூட்டம். கணக்கு வாத்தியாரா சில நேரம். நல்லா படிச்சா மரியாதையா நடத்துவாங்கன்றது புரிஞ்சது. காலனி வாழ்க்கை கூட்டுக் குடும்பம் போல்.
1979லே கல்லூரிப் படிப்பை முடிச்சப்ப மேலே படிக்கலாம்னு எண்ணம் இருந்தாலும் அப்பா உதவ மாட்டாருன்னு வேலைக்குப் போக தீர்மானிச்சு எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சுலே பதிவெல்லாம் பண்ணேன். ஆனா என்னோட சொந்த அனுபவங்கள் கவர்மெண்ட் வேலைக்கு போக வேணாமுன்னு முடிவெடுக்க வச்சது.
MMWSSB, TWAD, Agricultural இஞ்சீனியரிங்னு அழைப்பு வந்தப்ப போகலே.
கல்லூரிலே நான்காம் வருஷம் படிச்சப்ப நேவி ஷார்ட் ஸர்வீஸ் கமிஷன் பெங்களூருக்கு விளையாட்டாய் போய் செலக்ட் ஆகாம திரும்பி வந்துட்டேன்
கம்மின்ஸ் சர்வீஸ் எஞ்சீனீயர் பூனாவுக்கு கூப்பிட்டவும் போகலே. ஒருநாள் தற்செயலா V. பாலசுப்ரமணியம் பாத்தப்ப அம்பத்தூர் எஸ்டேட்லே மார்ஷல் சன்ஸ் கம்பெனிலே பர்ச்சேஸ் இஞ்சீனியர் வேலை இருக்குன்னு சொல்ல மறுநாளே இன்டர்வியூக்குப் போய் செலக்ட் ஆகி 13 ஆகஸ்டு 1979 லே வேலைக்குச் சேர்ந்து வாழ்க்கையோட வேறு பரிமாணத்துலே காலடி எடுத்து வச்சேன்.
எர்த் மூவிங் மெஷினரி தயாரிக்கும் நிறுவனத்துலே காஸ்டிங்ஸ் வாங்கிக் கொடுக்கற வேலை.
பயண ஓட்டங்கள் அப்ப தொடங்கி இப்ப வரை தொடர்ந்து கிட்டு இருக்கு, சுவையான அனுபவங்களோடு.
(வளரும்)

தமிழ்த்தாய்

ஊற்றுப் பெருக்காய் தமிழ்பாடி கவிஞனவன்
போற்றிப் பணிந்த தாயவளே நாவில்வா
சேற்றில் விளைந்த செந்தாமரை அழகே
நாற்றில் முதிர்ந்த நெல்லும் அழகே
காற்று வீசிடும் திசையெங்கும் நீயே
நேற்று இன்று நாளையும் இருப்யாய்
மாற்று மொழி யொன்று தேவைதானோ
வேற்று நாட்டினரும் அணைக்கும் மொழியானாய்
கொற்றவன் தரணியெங்கும் உனைச் சேர்த்தான்
பற்றிய பாதமதில் தினமும் தொழுதேன்
வற்றாத புலமையினை வரமாய்த் தருவாய் !

பயணக் கட்டுரை

உமர்கான் மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களின் பார்டர் டவுன், குஜராத் மாநிலத்துக்குச் சொந்தமானது.
வாபி வழியா போற பாசஞ்சர் ட்ரெயின் ஏறினா அங்கே இறங்கிக்கலாம். இந்த டவுனுக்கு அருகே உள்ள பீச்லே தான் மகாபாரதத்தின் சில காட்சிகள் சூட்டிங் பண்ணதாக தகவல்.
இந்த ஊர்லே இருந்து தான் "90கள்ளே வால்வ் ஸ்பிரிங் வாங்குவோம். அந்த ஸ்பிரிங் ஸேப்டி ரிலீப் வால்வுலே இருதயம் மாதிரி். பிரஷர் வெசல்லே வேலை செஞ்சவங்களுக்கு இத பத்தி தெரியும்.
ஸெட் பண்ண பிரஷருக் கு மேலே போறப்ப வால்வ் திறந்து பிரஷர குறைச்சுடும். ஆம் நீங்க நினைச்சது சரி. குக்கர் மாதிரி தான்.
அட்கோல வேலை செஞ்சப்ப அடிக்கடி இந்த ஊருக்குப் போவேன். அங்கே தங்க லாட்ஜ் கூட கிடையாது. அதனால் நான் ஃபாலோ பண்ண போற கம்பெனி ஓனரோட வீட்டிலே தான் தங்கனும்.
பெரிய சைஸ் ஸ்பிரிங் தயாரிக்கறது ஒரு இன்ட்ரஸ்டிங் விஷயம். ஸ்பிரிங் ஸ்டீல் ராட் தேவையான நீளத்துக்கு கட் பண்ணி அதை ஃபர்னஸ்லே ரெட் ஹாட் நிலைக்கு கொண்டு வந்து பிறகு அதை காயில் பண்ணி கிரைண்ட் பண்ணி ஹீட் ட்ரீட்மென்ட் பண்ணி சர்ஃபேஸ் கிரைண்ட் பண்ணி அதுக்கப்புறம் டெஸ்டிங் பண்ணனும். இதெல்லாம் ஒண்ணொன்னா பண்ண நேரம் அதிகம் ஆகும். அத்தனை நாட்களும் அங்கே தான் தங்கணும்.
பெரும்பாலும் வேலை முடிய நடுநிசி மேல ஆகும். அதுக்கப்புறம் வந்து குளிச்சு சாப்பிட ஒரு மணி ஆயிடும். மராட்டிய உணவு வீட்டுச் சமையல் டிபன் பாக்ஸ்ல இருக்கும். தாமோதர் பணிக்கர் மலையாளி தனியாகத்தான் தங்கி இருந்தார். நல்ல மனிதர். மும்பாயில் பிளாட் இருந்தாலும் வார இறுதியில் மட்டுமே போவார். குடும்பம் கேரளாவில்.
மராட்டிய உணவு நல்லாவே இருக்கும். காலை வேலைக்கு நமக்கு நாமே பிரட் ஜாம் தான்.
இங்கிருந்து வாபி வழியாக டாமன் யூனியன் பிரதேசம் அழகான கடற்கரை டவுன்.
ஒரு சமயம் இங்கிருந்து கிளம்ப நேரமானதால் மும்பை ஜூனாகத் வாயுதூத் விமானத்த தவற விட்டிருக்கேன்.
பறந்து, ட்ரெயின்லே ஊர்ந்து, டாக்ஸிலே பயணிச்ச பல இந்திய நகரங்கள் ஞாபகம் வருது.
ஒருமுறை விமான இருக்கைல என் பக்கத்துல இருந்த லேடி டாக்டர் லேட் நைட் நாய்டா போறீங்க கழுத்து செயின் கூட போடாதீங்கனு சொல்லி ஹைவேலே சமீபத்துல நடந்ததா ஒரு வழிப்பறி பற்றி சொல்லி பயமுறுத்தி அனுப் பினாங்க. அனுபவங்கள் இனிமை.

கடல் கன்னி

மேகக் கூட்டம் வானமதில் சுதந்திரமாய்
மேயும் மான் காட்டினிலே சுதந்திரமாய்
மாமரத்தில் கிளிக் கூட்டம் சுதந்திரமாய்
மாடிப் புறாக்கள் கோபுரத்தில் சுதந்திரமாய்
எறும்பும் சுறுசுறுப்பாய் இங்கும் அங்கும்
குறும்புக் குரங்கோ மரம்விட்டு மரம்தாவி
மீனினமோ நீருக்குள் நீந்தியது தன்போக்கில்
தேனீக்கள் தேனுறிஞ்சி கூட்டில் சேர்க்கும்
உயிரினங்கள் அதனதன் இடங்களிலே் ஆனந்தமாய்
கயிற்றினிலே கட்டியது போல் பலநாட்கள்
வீட்டுக்குள் அடைத்து வைத்து சிரிக்கின்றாய்
வீராப்பு போதும் நுண்ணுயிரே விட்டுப்போ
என்னைக் காணாத காதலி கடல்கன்னி
துன்புற்றுக் கரையோரம் காத்திருப்பாள் போகவிடு !

இயற்கை அழகு

பறவையினம் கூடு கட்டி குஞ்சை வளர்க்கும்
பசுங்கிளியோ பழம் தேடி பறந்து செல்லும்
குட்டி முயல் சிறு பொந்தில் எட்டிப் பார்க்கும்
சிட்டுக் குருவி முற்றத் தில் திரிந்து பறக்கும்
காக்கைக் கூட்டில் குயில் முட்டை இட்டுப் போகும்
காட்டுப் பன்றி குட்டிகளோடு குட்டை தேடும்
யானைக் கூட்டம் நீரைத் தேடி வனத்தில் திரியும்
பூனை ஒன்று எலியைத் தேடி பதுங்கி நிற்கும்
புலியதுவோ மான் கூட்டம் கண்டு பதுங்கிப் பாயும்
புள்ளிமான்கள் மிரண்டோடி மறைந்து போகும்
சிங்கராசா உடலைச் சிலிர்த்து நடை பயிலும்
சிறுநரியோ இரைதேடி இரவில் திரியும்
மயிலொன்று தோகை விரித்தாடி நிற்கும்
மந்திகள் மரம்விட்டு மரம் தாவி தொங்கி நிற்கும்
இவையாவும் கண்ட பின்னே மனமே துள்ளும்
இயற்கைதான் எத்தனை அழகென்று அமைதி கொள்ளும் !