சனி, 25 ஜூலை, 2020

இயற்கை அழகு

பறவையினம் கூடு கட்டி குஞ்சை வளர்க்கும்
பசுங்கிளியோ பழம் தேடி பறந்து செல்லும்
குட்டி முயல் சிறு பொந்தில் எட்டிப் பார்க்கும்
சிட்டுக் குருவி முற்றத் தில் திரிந்து பறக்கும்
காக்கைக் கூட்டில் குயில் முட்டை இட்டுப் போகும்
காட்டுப் பன்றி குட்டிகளோடு குட்டை தேடும்
யானைக் கூட்டம் நீரைத் தேடி வனத்தில் திரியும்
பூனை ஒன்று எலியைத் தேடி பதுங்கி நிற்கும்
புலியதுவோ மான் கூட்டம் கண்டு பதுங்கிப் பாயும்
புள்ளிமான்கள் மிரண்டோடி மறைந்து போகும்
சிங்கராசா உடலைச் சிலிர்த்து நடை பயிலும்
சிறுநரியோ இரைதேடி இரவில் திரியும்
மயிலொன்று தோகை விரித்தாடி நிற்கும்
மந்திகள் மரம்விட்டு மரம் தாவி தொங்கி நிற்கும்
இவையாவும் கண்ட பின்னே மனமே துள்ளும்
இயற்கைதான் எத்தனை அழகென்று அமைதி கொள்ளும் !

கருத்துகள் இல்லை: