சனி, 25 ஜூலை, 2020

பயணக் கட்டுரை

உமர்கான் மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்களின் பார்டர் டவுன், குஜராத் மாநிலத்துக்குச் சொந்தமானது.
வாபி வழியா போற பாசஞ்சர் ட்ரெயின் ஏறினா அங்கே இறங்கிக்கலாம். இந்த டவுனுக்கு அருகே உள்ள பீச்லே தான் மகாபாரதத்தின் சில காட்சிகள் சூட்டிங் பண்ணதாக தகவல்.
இந்த ஊர்லே இருந்து தான் "90கள்ளே வால்வ் ஸ்பிரிங் வாங்குவோம். அந்த ஸ்பிரிங் ஸேப்டி ரிலீப் வால்வுலே இருதயம் மாதிரி். பிரஷர் வெசல்லே வேலை செஞ்சவங்களுக்கு இத பத்தி தெரியும்.
ஸெட் பண்ண பிரஷருக் கு மேலே போறப்ப வால்வ் திறந்து பிரஷர குறைச்சுடும். ஆம் நீங்க நினைச்சது சரி. குக்கர் மாதிரி தான்.
அட்கோல வேலை செஞ்சப்ப அடிக்கடி இந்த ஊருக்குப் போவேன். அங்கே தங்க லாட்ஜ் கூட கிடையாது. அதனால் நான் ஃபாலோ பண்ண போற கம்பெனி ஓனரோட வீட்டிலே தான் தங்கனும்.
பெரிய சைஸ் ஸ்பிரிங் தயாரிக்கறது ஒரு இன்ட்ரஸ்டிங் விஷயம். ஸ்பிரிங் ஸ்டீல் ராட் தேவையான நீளத்துக்கு கட் பண்ணி அதை ஃபர்னஸ்லே ரெட் ஹாட் நிலைக்கு கொண்டு வந்து பிறகு அதை காயில் பண்ணி கிரைண்ட் பண்ணி ஹீட் ட்ரீட்மென்ட் பண்ணி சர்ஃபேஸ் கிரைண்ட் பண்ணி அதுக்கப்புறம் டெஸ்டிங் பண்ணனும். இதெல்லாம் ஒண்ணொன்னா பண்ண நேரம் அதிகம் ஆகும். அத்தனை நாட்களும் அங்கே தான் தங்கணும்.
பெரும்பாலும் வேலை முடிய நடுநிசி மேல ஆகும். அதுக்கப்புறம் வந்து குளிச்சு சாப்பிட ஒரு மணி ஆயிடும். மராட்டிய உணவு வீட்டுச் சமையல் டிபன் பாக்ஸ்ல இருக்கும். தாமோதர் பணிக்கர் மலையாளி தனியாகத்தான் தங்கி இருந்தார். நல்ல மனிதர். மும்பாயில் பிளாட் இருந்தாலும் வார இறுதியில் மட்டுமே போவார். குடும்பம் கேரளாவில்.
மராட்டிய உணவு நல்லாவே இருக்கும். காலை வேலைக்கு நமக்கு நாமே பிரட் ஜாம் தான்.
இங்கிருந்து வாபி வழியாக டாமன் யூனியன் பிரதேசம் அழகான கடற்கரை டவுன்.
ஒரு சமயம் இங்கிருந்து கிளம்ப நேரமானதால் மும்பை ஜூனாகத் வாயுதூத் விமானத்த தவற விட்டிருக்கேன்.
பறந்து, ட்ரெயின்லே ஊர்ந்து, டாக்ஸிலே பயணிச்ச பல இந்திய நகரங்கள் ஞாபகம் வருது.
ஒருமுறை விமான இருக்கைல என் பக்கத்துல இருந்த லேடி டாக்டர் லேட் நைட் நாய்டா போறீங்க கழுத்து செயின் கூட போடாதீங்கனு சொல்லி ஹைவேலே சமீபத்துல நடந்ததா ஒரு வழிப்பறி பற்றி சொல்லி பயமுறுத்தி அனுப் பினாங்க. அனுபவங்கள் இனிமை.

கருத்துகள் இல்லை: