சனி, 25 ஜூலை, 2020

மோகினி வருவாளோ ?

(எவ்வளோ தான் சமுதாயத்த பாடறது
அது மாறலே அதான் நான் மாறிட்டேன்
காதலி வருவா சொல்லி அனுப்பும் கவிஞரே)
விழித்துப் பார்த்தேன் இன்னொரு விடியல்
ஆதவன் கதி்ர்கள் அறைகள் எங்கும்
தூரத்தே குயிலின் கூவல் இதமாய்
படுக்கை மட்டு்ம் கசந்தது ஏனோ
இரவுப் பாட்டு நடுநிசி முடிந்தது
உறவைத் தேடிய மெல்லிய ராகமாய்
உள்ளத்தின் வெப்பம் உடலிலும் காண்கிறேன்
தென்றல் வந்து தோளைத் தழுவுமோ
பூங்காற்று நாசித் துவாரத்தே சேருமா
கேள்விகளோடே நாளும் பிறந்தது இன்று
நாளையும் வரும் நாளொன்று பிறக்கும்
விடைகள் காணாமலே மாலையும் மலரும்
மோகனம் பாடிட மோகினி வருவாளோ ?

கருத்துகள் இல்லை: