சனி, 25 ஜூலை, 2020

விடியலின் கனவு

அருகில் வந்தாள் உரசி நின்றாள்
அவளது விரல்களோடு எனது விரல்களும்
கண்களுக்குள் எதையோ தேடிப் பார்த்தாள்
கண்மூடி சிலநொடிகள் மௌனித்து இருந்தாள்
அழகாய்ப் புன்னகைத்து விரல் சொடுக்கினாள்
பழகிய நாட்கள் பலவென்று சொன்னாள்
புரியாத மயக்கத்தில் பார்த்து நின்றேன்
தெரியாதா நானென்று உமக்கு நகைத்தாள்
ஏனிந்தத் தயக்கம் என்னிடத்தே என்றாள்
ஏனோ எனக்கு வார்த்தைகள் வரவில்லை
அவளைக் காண்பதே சுகமாய்க் கண்டேன்
பாவமாய்ப் பார்வை படர விட்டாள்
மடிமீது தலைவைத்து முகம் நோக்கினாள்
நொடியது மாறாத நிலையில் நான்
இமைகள் திறந்த நேரமதில் அறிந்தேன்
இதுவும் இன்னொரு விடியலின் கனவென்று

கருத்துகள் இல்லை: