சனி, 25 ஜூலை, 2020

நதியே கடல் சேர்வதெப்போது

பனியுருகி பாதை விரிந்து ஓடுகின்ற நதியே
வளைந்து நெளிந்து கரைபுரண்டு கடல் சேர்வதெப்போது
வருகின்ற வழிதோறும் என்னென்ன கண்டாய் சொல்வாயா
மலையரசி கண்டாளா கனியமுது காய்கறிகள் தந்தாளா
மண்ணோடு உறவாடி மதகுகடந்து ஏனிந்த வேகம்
கானகத்து மரவேரும் உனைத் தழுவக் கண்டேன்
கரையோரப் புல்லும் வளைந்து உறவாடக் கண்ணுற்றேன்
மீன்கள் துள்ளி விளையாடி நீந்தக் கண்டேன்
மீன்கொத்திப் பறவையதோ இறைதேடி பாய்ந்தது உன்னுள்ளே
சிறியோரும் பெரியோரும் பெண்டிரும் நீராடிக் களித்தாரே
சித்திரை கடந்து ஆடிப்பெருக்கில. அலங்கரித்து மகிழ்ந்தாரே
கடலோரம் நானோ உன்வரவு நோக்கிக் காத்திருப்பேன்
காலம் கடத்தாமல் வந்திங்கு சேர்வாயா விரைவில் !

கருத்துகள் இல்லை: