சனி, 25 ஜூலை, 2020

தமிழ்த்தாய்

ஊற்றுப் பெருக்காய் தமிழ்பாடி கவிஞனவன்
போற்றிப் பணிந்த தாயவளே நாவில்வா
சேற்றில் விளைந்த செந்தாமரை அழகே
நாற்றில் முதிர்ந்த நெல்லும் அழகே
காற்று வீசிடும் திசையெங்கும் நீயே
நேற்று இன்று நாளையும் இருப்யாய்
மாற்று மொழி யொன்று தேவைதானோ
வேற்று நாட்டினரும் அணைக்கும் மொழியானாய்
கொற்றவன் தரணியெங்கும் உனைச் சேர்த்தான்
பற்றிய பாதமதில் தினமும் தொழுதேன்
வற்றாத புலமையினை வரமாய்த் தருவாய் !

கருத்துகள் இல்லை: