சனி, 25 ஜூலை, 2020

தாமரைத்தோட்டம் பழைய காவலர் குடியிருப்பு

அத்தியாயம் எட்டு

வாழ்க்கையில் துன்பங்களும் இன்பங்களும் மாறி மாறி வருவது இயற்கை. அனைவருக்கும் பொருந்தும். வெவ்வேறு கால கட்டங்கள் வெவ்வேறு அனுபவங்கள்.
சுமார் ஆறு மாதம் சைக்கிள்ளே கல்லூரிக்கு சென்றது நினைவில் வருகிறது.கீழ்பாக்கம் டூ கிண்டி பொறியியல் கல்லூரி. பொதுவா என் கிட்டே காசே இருக்காது. அப்படி ஒரு நாள் சைக்கிள் பஞ்சர் ஆகி அப்பா வேலைல இருந்த மவுண்ட்ரோடு ஸ்பென்ஸர் எதிர்லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் வரை தள்ளிக் கொண்டு வந்தது பசுமையா ஞாபகத்துல இருக்கு.
நான்காவது ஐந்தாவது வருஷப் பீஸ் மத்த செலவுக்கு அப்பா கொடுக்கறத நிறுத்திட்டார், எதிர் வீட்டு நடராஜன் உதவி செஞ்சாருன்றத வேற கட்டுரைகள்ளே சொல்லி இருக்கேன்..
அதே போல முதல் காதல் பத்தியும் வேற கட்டுரைகள்ளே சொல்லியிருக்கேன். இதே கால கட்டத்துலே தான் கல்லூரி நண்பர்கள் போலவே காலனி நண்பர்கள் பலரும் உதவியும் செஞ்சு இருக்காங்க.
சம்பந்தம், இராஜேந்திரன்,அந்தோணி,அஷோக்,இரவி அம்மா, சம்பந்தம் குடும்பம், நடராஜன் குடும்பம்னு பலரும் ஏதாவது வகைல உதவி இருக்காங்க. இவங்க எல்லாருமே பாகுபாடின்றி குடும்பத்துலே ஒருத்தனா மதிச்சாங்க. அம்மா இல்லாத குறை தெரியாம காலம் போச்சு.
சின்னக் குழந்தைங்க அண்ணானு கூப்பிட்டுக் கிட்டு ஒரு பெருங்கூட்டம். கணக்கு வாத்தியாரா சில நேரம். நல்லா படிச்சா மரியாதையா நடத்துவாங்கன்றது புரிஞ்சது. காலனி வாழ்க்கை கூட்டுக் குடும்பம் போல்.
1979லே கல்லூரிப் படிப்பை முடிச்சப்ப மேலே படிக்கலாம்னு எண்ணம் இருந்தாலும் அப்பா உதவ மாட்டாருன்னு வேலைக்குப் போக தீர்மானிச்சு எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சுலே பதிவெல்லாம் பண்ணேன். ஆனா என்னோட சொந்த அனுபவங்கள் கவர்மெண்ட் வேலைக்கு போக வேணாமுன்னு முடிவெடுக்க வச்சது.
MMWSSB, TWAD, Agricultural இஞ்சீனியரிங்னு அழைப்பு வந்தப்ப போகலே.
கல்லூரிலே நான்காம் வருஷம் படிச்சப்ப நேவி ஷார்ட் ஸர்வீஸ் கமிஷன் பெங்களூருக்கு விளையாட்டாய் போய் செலக்ட் ஆகாம திரும்பி வந்துட்டேன்
கம்மின்ஸ் சர்வீஸ் எஞ்சீனீயர் பூனாவுக்கு கூப்பிட்டவும் போகலே. ஒருநாள் தற்செயலா V. பாலசுப்ரமணியம் பாத்தப்ப அம்பத்தூர் எஸ்டேட்லே மார்ஷல் சன்ஸ் கம்பெனிலே பர்ச்சேஸ் இஞ்சீனியர் வேலை இருக்குன்னு சொல்ல மறுநாளே இன்டர்வியூக்குப் போய் செலக்ட் ஆகி 13 ஆகஸ்டு 1979 லே வேலைக்குச் சேர்ந்து வாழ்க்கையோட வேறு பரிமாணத்துலே காலடி எடுத்து வச்சேன்.
எர்த் மூவிங் மெஷினரி தயாரிக்கும் நிறுவனத்துலே காஸ்டிங்ஸ் வாங்கிக் கொடுக்கற வேலை.
பயண ஓட்டங்கள் அப்ப தொடங்கி இப்ப வரை தொடர்ந்து கிட்டு இருக்கு, சுவையான அனுபவங்களோடு.
(வளரும்)

கருத்துகள் இல்லை: