சனி, 18 டிசம்பர், 2021

கொற்றவன் எங்கே

 கொற்றவன் எங்கே மக்கள் தேடினர்

உற்றவனும் உறங்கப் போய் விட்டானோ
பற்றற்ற வாழ்விதுவோ பசியது போக்குவரோ
கற்றவர் கல்லாதோர் எல்லோரும் வாடுவதோ
நற்றமிழ் அறிஞர்கள் தர்மம் மறந்தனரோ
சோற்றுக்கும் வழியில்லை மூச்சுக் காற்றுமில்லை
வேற்று நாட்டினர் வேதனை உற்றனர்
நாற்று நட்டது பதராய்ப் போனதோ
மாற்று வழிதேடி மாநிலத்தோர் அலைந்தனரே
கூற்றுவன் வலைவீசி வீதியெங்கும் அலைந்தபடி
தொற்று நோயென்று முடங்கி நாளாயிற்று
தொல்லை நீங்கிடுமோ துயரம் விலகிடுமோ

கருத்துகள் இல்லை: