சனி, 18 டிசம்பர், 2021

இறைவனின் நாடக மேடை

 இறைவனின் நாடக மேடையில் இதுவும் நாடகமோ

கறைகள் களைய கருத்தில் இருத்தும் காவியமோ
குறைகள் பலவும் குவிந்தே இருக்கும் என்றானோ
நிறைகள் இருந்தும் நிம்மதி தேடுவதும் இதுதானோ
மறைகள் சொல்லிய நல்லவை மறந்ததன் பலனோ
முறைகள் அற்று வாழ்வதின் விளைவு ஆகுமோ
விடைகள் தேடியே ஓடுவது எங்கே சொல்வாயா
விடுதலை கிட்டுமோ விடியலும் தோன்றுமோ விரைவில்
செயலின் பலனை சேர்ந்தே உணரும் நாட்களோ
செல்லுமோ விட்டு விலகுமோ வினாக்கள் மனதில்
வாழ்வின் தத்துவம் பலவும் அறிந்திடும் தருணம்
வீழ்வதும் உயிர்ப்பதும் நம்மிடம் இல்லை என்பதும்
உயர்ந்தவன் வறியவன் அறிந்தவன் முட்டாள் அனைவரும்
உயிர்ப் பயம் கொள்வது காட்சியாய் நிதமும்
உணர்ந்தோம் இறைவா உனது விளையாட்டு என்றே
கணக்கும் புரிந்தது திருந்தி வாழ்வோம் வாழவிடு !

கருத்துகள் இல்லை: