சனி, 18 டிசம்பர், 2021

மைசூர்

 காவிரி நதி பாய்வதாலோ என்னவோ மைசூர் நகரைச்சுற்றி பல சுற்றுலாத் தலங்கள்.

ஒவ்வொன்றும் சிறப்பானவை. சரித்திரப் பெருமை பெற்றவை. சுமார் பதினைந்து கிமீ சுற்றளவில் பல இடங்கள்.
கூகுள் செய்தால் அனைத்து இடங்களையும் பற்றிய விவரங்கள் அறியலாம். பெங்களூரில் இருந்து சுமார் 160 கிமீ தொலைவில் உள்ள இந்நகரை பல மன்னர்கள் ஆண்டாலும் உடையார்கள் அரண்மனை உலகப் புகழ் பெற்றது.
சாமுண்டி மலை, பிருந்தாவனம், ஜூ என்று பல இடங்களோடு மைசூர் பட்டு மற்றும் சந்தன வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகள், வாசனை திரவியங்கள் என பலவும் உங்கள் மணிபர்சை காலி செய்யக் காத்திருக்கும். உங்கள் துணைவியின் உடலைத் தழுவ கழுவும் மீனில் நழுவும் மீன் போன்ற பல வண்ணச் சேலைகள் ஏராளம்.
சற்றே நகரை விட்டு வெளியே வந்தால் இரங்கணத்திட்டு பறவைகள் சரணாலயம், கபினி விலங்குகள் சரணாலயம், பலமுரி நீர் வீழ்ச்சி, தலக்காடு, திரிவேணி சங்கமம் என சுற்றுலா இடங்கள் பலவும் காணலாம்.
அது மட்டுமன்றி இந்த நகரம் ஒரு நுழைவாயில் போல. ஊட்டி, வயநாடு, மங்களூர்,கூர்க் என்று பல சுற்றுலாத் தலங்களுக்கு இதன் வழியாகப் பயணிக்கலாம்.
காவிரி ஓடுவதால் பசுமை நிறைந்த பல இடங்கள் கண்களுக்கு விருந்தாகும்.

கருத்துகள் இல்லை: