சனி, 18 டிசம்பர், 2021

முண்டாசுக் கவிஞன்

 முண்டாசுக் கவிஞன் முந்திப் பிறந்தானோ

கண்டால் கேட்டுச் சொல்லும் ஐயா
ஏனந்த அவசரமோ தந்தவனே பிரித்தான்
ஏளனம் செய்தே ஏழையாய் வைத்தான்
முரட்டு மீசையும்
முரட்டுத் தமிழும்
முரட்டுக் காளையவன் தறிகெட்ட ஓட்டம்
பெண்ணுக்குச் சமநிலை பேசிப் போனான்
கண்ணனை கண்ணம்மாவை பராசக்தியை அழைத்தான்
வார்த்தைக் கனல் உடல் முறுக்கேறும்
பார்ப்போர் விழியில் ரௌத்ரம் தோன்றும்
அவன் தொடாத வாழ்வியல் ஏதுமுண்டோ
அவனை மறந்தோமே அவதூறு பேசினோமே
கங்கையும் காவிரியும் இணைத்த கவிஞனே
எங்கே நீயென்று ஏங்கித் தவிக்கிறோம்
இறந்த பிறகே உன்புகழ் பாடினோம்
இறைவன் உன்னை இளமையில் அழைத்ததேன் ?

கருத்துகள் இல்லை: