சனி, 18 டிசம்பர், 2021

கரைசேரும் நாளெதுவோ

 மண்ணுக்கு பாரம் ஆனேனோ இறைவா

கண்ணுக்குள் கண்ணீரே காய்ஞ்சு போச்சுதுவே
கண்ணான கணவனையும் காணலியே இருக்கானோ
பெண்ணுக்கு ஏனிந்த அவலம் தெரியலியே
சொந்தம் பந்தமில்லே சொந்த நாடுமில்லே
கந்தல் வாழ்க்கை ஆயிடுச்சு கடவுளே
ஏனிந்த தண்டனை எமக்குச் சொல்வாயா
குனிந்த தலைக்கே குட்டா குறையாதோ
கள்ளத் தோணியிலே கரைசேரும் நாளெதுவோ
பிள்ளை இழந்த சோகம் போவதெப்போ
தமிழனாய்ப் பிறந்ததே தவறோ தெரியலியே
உமிழும் எச்சிலும் வறண்டு நாளாச்சு
முடங்கிப் போச்சு எம்ம இனம்
முடிவில்லா இரவுகளே கதையாகிப் போனதிங்கே !

கருத்துகள் இல்லை: