சனி, 18 டிசம்பர், 2021

Jack of many subjects master of none Part - 2

BSc Maths படிச்சுகிட்டு இஞ்சீனியரிங் அட்மிஷன்க்கு வெயிட் பண்ணிகிட்டு இருந்த காலம். Analytical Geometry ஒண்ணுமே புரியலை, நூத்துக்கு நூறு வாங்கினவனா நான் அப்படின்னு சந்தேகம். ஒரு வழியா கிண்டி பொறியியல் கல்லூரி அட்மிஷன் கிடைச்சப்ப அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முதல் முதலா குடும்பத்துலே இஞ்சீனியர் படிக்கப் போறேன்றது மட்டுமில்ல, போலீஸ் குவார்ட்டர்ஸ்லேயும் முதல் மாணவனா சேரப்போறேன்னு இரட்டிப்பு மகிழ்ச்சி.
சேத்துப்பட்டுக்கு நடந்து போய் டிரெயின் புடிச்சு சைதாப்பேட்டைல பஸ் பிடிச்சு கல்லூரிக்குள்ளே நுழையறப்ப ஒரு பெருமை மனசுக்குள்ளே இருக்கத்தான் செஞ்சது. என்னோட பேரு V ல தொடங்கறதாலே D செக்‌ஷன்லே இடம். முதல்லே பதினொரு பேர் மட்டும் இருந்த வகுப்பு சேலம் முதலான இடங்கள்ளே இருந்து மாணவர்கள் சேர்ந்து முழு அளவு எட்டுச்சு.
முதல் இரண்டு வருஷம் எல்லோருக்கும் பொதுவான பாடங்கள். என்னோட பதிவு எண் 2075. Drawing, Maths, English, Chemistry lab எல்லாம் உண்டு. Englishle punishmenta வகுப்பு முழுதும் imposition எழுதினதெல்லாம் நடந்துச்சு. ராகிங் பண்றது ரொம்பவே உண்டு, ஹாஸ்டல்லே இருக்கவங்களுக்கு அதிகம். பஸ் ஸடாண்ட்லே எல்லார் முன்னால் முட்டி போட்டு டோப் சல்யூட் பண்ணனும்.
மெது மெதுவா கல்லூரி பழக்கமாச்சு. விளையாட்டு மைதானம், கேன்டீன், விவேகானந்தர் அரங்கம்,லைப்ரரினு பல இடங்கள். நணபர்கள் குழுக்கள் சேர ஆரம்பிச்சோம். சோமு, சுரேஷ், கந்தசாமி,விஸ்வநாதன் (KNV), ரேணுகோபால் இவங்களாம் என்னோட குழு. நான் புட்பால், ஆக்கி விளையாட்டு வகுப்பு டீம்லே ஆடுவேன். NCC Armyle யும் சேர்ந்தேன். அது வாரம் ஒருமுறை Uniform போட்டு பெரேட் இருக்கும்.
கேம்ப் பல்லாவரத்துலே ஒரு தடவ, அப்ப தான் மெஷின் கன் சுடவும் பயிற்சி கொடுத்தாங்க. எக்ஸாம் வச்சு B certificateம் கொடுத்தாங்க.
மரத்தான் ரேஸ்லே ஓடினேன் நானுன்னு இப்ப நினச்சா ஆச்சர்யமா இருக்கு.ரெண்டு வருஷ படிப்பு முடிஞ்சது. இப்ப பிராஞ்ச் பிரிக்கிறதும் மார்க் அடிப்படைலே. எனக்கு எப்படியோ நான் கேட்ட மெக்கானிக்கல் இஞ்சீனியரிங் கிடைச்சது.
நல்லா படிக்கற பலரும் எலக்ட்ரானிக்ஸ் தேர்வு செஞ்சாங்க. பிராஞ்ச் பிரிஞ்சு போறதாலே இரண்டாம் வருஷ முடிவுலே பிரிவு உபசாரம் நடந்தது. அதில் வகுப்புத் தோழிகள் பெயர்லாம் வர மாதிரி கவிதை எழுதி படிச்சேன். மறுநாள் கல்லூரிக்குள் நுழையறப்ப தோழி ஒருத்தி கவிதையைப் பாராட்டி பேசியபடி வந்தா. முதன் முதலா ஒரு பெண்ணோட பேசியபடி நடந்தது அப்பதான்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: