சனி, 18 டிசம்பர், 2021

விட்ட இடத்திலே தொடங்கு

 விட்டு விடு என்கிறாய் விட்டு விடவா

விலகிச் செல் என்கிறாய் எங்கே செல்ல
பட்ட பின்பு தானே பாவமெனத் தெரிகிறது
சுட்டால் தானே நெருப்பென அறிவு வருகிறது
கெட்ட பின்பே வாழ்வில் ஞானம் உதிக்கிறது
வட்டப் பாதையில் தொடக்கமும் முடிவும் இல்லையே
நட்ட கன்றே வளர்ந்து நெடு மரமாகும்
எட்ட நின்று பார்த்தாலே எதுவும் புரியும்
மட்டப் பலகை ஒன்றே தரையைச் சீராக்கும்
முட்ட முட்டத்தான் கன்றுக்கு பால் சுரக்கும்
கொட்டக் கொட்டத்தான் மண்டையிலே ஏறுது மாணவனுக்கு
விட்ட இடத்திலே தொடங்கு முடிவு விரைவில்

கருத்துகள் இல்லை: