சனி, 18 டிசம்பர், 2021

அழகு

 நடை பழகு உடல் மெலிய

உடை அழகு உருவம் அழகு
இடை மெலிய இவள் அழகு
சடை நீளம் கருங் கூந்தல்
படை கொண்ட தலைவி அவள்
எடை போட ஆயிரம் கண்கள்
ஆடை அணிகலன் மெருகு ஏற்றும்
கடைக் கண் பார்வை மயக்கும்
வாடைக் காற்று உடல் தழுவும்
சோடை போகாது சொக்கும் அழகு
குடைக்குள் மறைந்து நடந்து செல்லும்

கருத்துகள் இல்லை: