சனி, 18 டிசம்பர், 2021

எத்தனை உன்னதம்

 எத்தனை உன்னதம்

பார்க்கவும் அஞ்சும் காட்சிகள்
மனதை உருக்கும் கண்ணீர்
தொடுவதற்கும் தயங்கும் உடற்கூறு
முகம் சுளிக்க வைக்கும் துர்நாற்றம்
ஒரு சில மணித்துளிகளே இருக்க யோசிக்க வைக்கும் சூழல்
அதுவே வாழ்க்கையின் பெரும்பகுதியாய் இருக்கும் மருத்துவ மனைகளில் பணியாற்றும் மனித உள்ளங்களே
இறைவனின் பல அம்சங்களே நீங்கள்
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
உங்கள் உள்ளங்களே கோயில்கள்
இத்தகைய பேரிடரை மானிடம் கண்ட பிறகே
உங்களை நாங்கள் நினைவு கூர்கிறோம்

கருத்துகள் இல்லை: