சனி, 18 டிசம்பர், 2021

போற்றுக !

 மனதிலே அமைதி வேண்டியே போற்றுக

உனதிலை எதுவுமே தெளிந்தே போற்றுக
கடிதென இருப்பவை இளகிட போற்றுக
விடிவது நல்காலை என்றே போற்றுக
மானிடம் வளமுடன் வாழவே போற்றுக
மாற்றமே நன்மையாய் மாறிடப் போற்றுக
மாநிலம் தழைத்திட மறுமுறை போற்றுக
நோயது விலகியே ஓடிட போற்றுக
காயமே பொய்யடா உணர்ந்திட போற்றுக
சிந்தனை செயலிலே தூய்மையைப் போற்றுக
நிந்தனை மற்றோரை தவிர்த்திட போற்றுக
கல்வியும் செல்வமும் சேர்ந்திட போற்றுக
நல்வினை ஈகையே உணர்ந்திட போற்றுக
இயற்கை வளங்களை காத்திடப் போற்றுக
இறைவன் ஒருவனே அறிந்தே போற்றுக !

கருத்துகள் இல்லை: