சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 1

ஆகஸ்ட் 30, 2021 திடீரென்று மனதிலே எண்ணம். கோவிட்னாலே வீட்டிலே பல நாட்கள் அடைபட்டதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய்த் திரிய வேண்டும் என்ற எண்ணம். அதை உடனடியாக செயல் படுத்தணும்னு முடிவும்.

நண்பர்கள் ஒவ்வொருவராய்க் கேட்க ஒரு வாரமா தாங்காது என்றும், வீட்லே விசேஷம் அப்புறமா போலாமென்றும் பதில். என் மனசு உடனே கிளம்பணும்னு சொல்லுச்சு, தள்ளிப் போடாம. நாள் குறிச்சாச்சு, செப்டம்பர் 1 கிளம்பறதுண்ணு.
ஒரு லாங் டிஷ்கஷன் நண்பன் சாம் ஓட. நான் டின்னர் சாப்பிட்டு வரதுக்குள்ள எக்ஸல் ஷீட்லே புறப்படற தேதி, போக வேண்டிய இடங்கள், பயண நேரம்,தங்கும் நேரம், பயண தூரம், ஆகும் செலவுகள் எல்லாம் பட்டியலிட்டு வாட்சப்லே வந்துடுச்சு. மின்னல் வேக செயல்பாடு.
அந்தோணி, இராசேந்திரன் குற்றாலத்துலே செப்டம்பர் 5 லே சென்னையிலிருந்து வந்து கலந்து கொள்வதாக முடிவாயிற்று. போகுமிடங்கள் பட்டியலும் முடிவாயிற்று. பெங்களூர்,திண்டுக்கல்,சிறுமலை,இராமேஸ்வரம்,திருநெல்வேலி,கன்யாகுமரி,மாஞ்சோலை,மதுரை,மேகமலை,ஏற்காடு, பெங்களூர் என்று.
வேண்டிய துணிமணிகள் முதலானவை முந்திய இரவு பேக் செய்யப்பட்டு தயார்நிலையில். செப்டம்பர் 1 காலையில் எழுந்து காரை நன்றாக கழுவி வைத்து, குளித்து புறப்படத் தயார். சுமார் 10 45க்கு கார் வீட்டை விட்டுக் கிளம்பியது. ஓசூருக்குப் பிறகு பெட்ரோல் நிறப்பினால் லிட்டருக்கு மூன்று ரூபாய் மீதம் என்ற மனக்கணக்கும் போட்டு பயணம். டிராபிக் மிதமாக இருக்க மிதமான வேகத்தில், ஓசூர் கிருஷ்ணகிரி இடைப்பட்ட HP பெட்ரோல் பங்க்ல் டேங்க் நிரப்பிய பிறகு டைம் பாத்தப்ப மதிய உணவு அங்கேயே கிருஷ்ணா பவனில் சாப்பிட முடிவு பண்ணி, சாப்பிட்டு முடிச்சு வாட்டர் பாட்டிலும் வாங்கிட்டு பயணம் தொடர்ந்தது. இப்ப வேகம் எடுக்க ஆரம்பிச்சது கார். நூறைக் கடந்து சில இடங்களில்.
முன்னதாக என் மொபைல் நெட் வொர்க் ஆகலேன்னு, மகனுக்கு போன் பண்ணி paytm லே டோலுக்குண்ணு பணமும் நிரப்பியாச்சு. ஒவ்வொரு டோலா கிராஸ் பண்ணி பணம் டெபிட் ஆகறப்ப கொள்ளை அடிக்கறாங்கணு தோணுச்சு.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, தொப்பூர், சேலம், கரூர்னு ஒவ்வொரு ஊரா கடந்து திண்டுக்கல் சேருறப்போ மணி ஐந்தே கால். கிட்டத்தட்ட கணக்கிட்ட படி வந்தாச்சு. ஆன்லைன்லே புக் பண்ண ஓட்டல் தேடிக் கண்டு பிடிக்க கொஞ்சம் டைம் ஆச்சு. வந்த களைப்புலே ரூம்லே டிபன் ஆர்டர் பண்ணி, குளிச்சு சாப்பிட்டு முதல் நாள் கணக்கை எழுதி முடிச்சு, மறுநாள் காலை சிற்றுண்டி முடித்து சிறுமலை பயணம்னு நினைச்சுகிட்டே உறக்கம் தழுவியது.
(நாள் ஒன்று)

கருத்துகள் இல்லை: