சனி, 18 டிசம்பர், 2021

வாழ்வில் இயல்பு

 பறக்க முடியுமானால் பறவையாகி விடுவேன்

துறக்க முடியுமானால் அனைத்தும் துறப்பேன்
பிறக்க முடியுமெனில் குழந்தையே என்றும்
மறக்க பலவுண்டு மனதினில் இருத்தாமல்
கறக்க வேண்டுமெனில் கன்று வேண்டுமன்றோ
உறக்கம் வேண்டுமெனில் உள்ளம் அமைதிநிலை
சிறப்பது செய்வதெனில் வறியவர்க்கு உதவி
நிறங்கள் பலவெனினும் மலர்கள் அழகு
இறக்கம் ஏற்றம் வாழ்வில் இயல்பு

கருத்துகள் இல்லை: