சனி, 18 டிசம்பர், 2021

அகண்ட காவேரி

 குடகிலே உருவாகி குறுகிய உடலோடு

கடந்த வழிகளிலே கிளையாறு இணைந்து
அகண்ட காவேரியாகி மலைகளைக் கரைத்து
அழகான நதியாகி ஆர்ப்பரிக்கும் அருவியாகி
வளைந்து நெளிந்து வனப்போடு நங்கைபோல்
வசமாக்கி வயல்வெளி மணல்மேடு காடுமேடு
அணையொன்று தடுத்ததாலே அடங்கி பயணித்து
ஆணைக்கு அடங்காத வீரத்தோடு பாய்ந்து
கடல்சேர கண்ணகியின் பூம்புகாரை அடையுமாம்

கருத்துகள் இல்லை: