சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 3

 காலையில் ரெடியாகி கடலைத் தரிசனம் செய்து திரும்பறப்ப தானாக வந்து அறிமுகம் செய்து கொண்ட முருகன் என்ற guide உடன் இன்றைய பயணம் தொடங்கியது.

கோயில் மேற்கு வாசல் சரவண பவனில் டிபன் சாப்பிட்டு, தனுஷ்கோடி கடல் எல்லைக்கு பயணம். போகும் வழியில் கடல் சீற்றத்தில் சிதிலமடைந்த இரயில் நிலையம், சர்ச், போஸ்ட் ஆபீஸ் என கிளிக்கிவிட்டு, முற்றுப் பெறாத மிலிட்டரி வாட்ச் டவரைக் கடந்து இந்துமாக் கடலும் வங்காள விரிகுடாவும் சங்கமிக்கிற இந்திய எல்லைக் கடல்லே நின்று சில போட்டோக்கள்.
அங்கே டெலஸ்கோப்லே தூரத்தே தெரியும் மணல் திட்டுக்கள் இலங்கைக் கரைன்னு கப்ஸா விடறவனுக்கு 20₹ கொடுத்துட்டு வந்தப்ப, நம்ம முருகன் சொன்னார், இந்தக் கடல் எப்படி பொங்கும்னு யாருக்கும் தெரியாது அதனால் யாரையும் இங்கே தங்க அனுமதி இல்லை, மாலை ஐந்து மணி வரைதான் கடைகளுக்கும் விசிட்டர்களுக்கும் அனுமதினு.
அவருடைய சிபாரிசுலே Mr. Fish கடைல புதுவித ருசியோட மீன் வறுலும் இறால் வறுவலும், மீன் குழம்பு சாதமும் சாப்பிட்டு, மாஸ்க் போடாம கார் ஓட்டியதாலே 200₹ பைன் கட்டியதாச்சு. இதுலே சிறப்பு முருகன் பிணைக்கைதி நான் பக்கத்துலே போய் ATM போன்ற கடைல பணம் வாங்கிட்டு வர வரை.
அடுத்த விசிட் அப்துல் கலாம் அவர்களின் இல்லம். வீடு முழுதும் அவர் பெருமை பறைசாற்றும் சர்டிபிகேட், பரிசுப் பொருட்கள், பயன்படுத்திய பொருட்கள்னு நிறைய. புத்தகங்கள் அவரோடது இரண்டு வாங்கிக் கொண்டு, அவரது அண்ணன் குடும்பம் வீட்டில் ஒரு பகுதிலே இருக்காங்கனு தகவலும் சொன்னாங்க.
அடுத்த இடம் இராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்ட மிதவைக் கற்கள் வைக்கப்பட்ட இடம். பவழப் பாறைகள் போன்ற பெரிய கற்கள் நீரில் மிதப்பது ஆச்சர்யமே. அனுமார் தரிசனமும் அங்கேயே.
திரும்பி ஓட்டலுக்கு வர வழியிலே முருகன் விடை பெற்றுக் கொண்டார். ஓட்டலை விட்டுக் கிளம்பி கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு அடுத்த விசிட் தங்கச்சி மடம் என்ற ஊர்லே. மிக அழகாகப் பராமரிச்ச நினைவிடம் அவரது புகைப்படங்கள் பன்னாட்டு தலைவர்களோட. இங்கேயும் அவரது பல நினைவுப் பொருட்கள் காட்சிக்கு. புகைப்படம் எடுக்க அனுமதியிில்லை. அழகான பூங்காவும் நினைவகம் சுற்றி. வெளியே வந்து போட்டோ எடுத்துட்டு கிளம்பறப்ப மணி மூன்றே கால்.
அடுத்த இலக்கு திருநெல்வேலி. இந்தப் பயணம் தான் கொஞ்சம் கடினம். அகலம் குறைஞ்ச சாலை. இருட்ட ஆரம்பிச்சது. ஒரு ரோட்டோரக்கடைல முட்டை போண்டா, டீ சாப்பிட்டு பனைவெல்லம் வாங்கிக்கிட்டு லேசான தூறல் மழைல பயணம் தொடர்ந்தது.
ஸ்டேட் ஹைவே நீண்டுகிட்டே போச்சு. ஒரு வழியா தேசிய நெடுஞ்சாலை தூத்துக்குடியைக் கடந்து சேருறப்ப மணி ஏழரை. பயணம் நீண்டுகிட்டே இருப்பது போல உணர்வு. கண்ணுலே பட்ட முதல் ஓட்டல்லே விசாரிச்சு, இம்பீரியல் ரெசிடன்சி ரூம்லே நுழையறப்ப மணி ஒன்பது நெருங்கி இருந்தது. பசியில்லாத்தாலே சிறுமலை வாழைப்பழம் இரண்டை சாப்பிட்டு, வாட்சப்லே மெசேஜ் நலமுடன் சேர்ந்ததை அனுப்பிட்டு, களைப்பு தீர குளிச்சு படுக்கைக்கு போயாச்சு.
(நாள் மூன்று)

கருத்துகள் இல்லை: