சனி, 18 டிசம்பர், 2021

இரயில் பயணம்-டென்ஷன்

18/7/21 காலை 6 20, பெங்களூர் சிட்டி இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 02608 சிறப்பு இரயிலில் 16 இருக்கைகள் உறவினர் குல தெய்வம் பூஜைக்குப் போக, இரவே ஓலா டாக்சி புக் பண்ணியாச்சு.

5 15க்கு வர வேண்டிய வந்து விட்டதாக ஆப் காண்பித்தது. 5 20 க்கு கீழே இறங்கி தெரு முழுதும் பார்த்தால் காணவில்லை. போனில் தொடர்பு கொண்டபோது டிரைவரால் எங்கிருக்கிறார், சொல்லத் தெரியவில்லை. ஆனால் சில நிமிடங்களில் கேன்சல் ஆகிவிட்டது.
அடுத்த டாக்சி புக் பண்ணி டிரைவரிடம் பேசிய போது பறித்தினி என்று உறுதி செய்தான், ஆனால் சில நிமிடங்களில் அவனும் கேன்சல் செய்து விட்டான். மழையாக இருந்ததால் மீண்டும் வீட்டுக்குச் சென்று குடை எடுத்துக் கொண்டு மெயின் ரோடு சேந்தப்ப மணி 6.
ஆட்டோக்கள் இல்லை. சில நிமிடங்களில் ஒருவர் வந்தார். அவரிடம் சீக்கிரம் போங்கனு சொல்லி உட்கார்ந்தாச்சு. அவர் வழியில் கேஸ் பில் பண்ணி மழைநீர் தேங்கி இருந்த பள்ளங்களில் இறங்கி ஏறி டபுள் ரோடில் எனஜின் ஆப்.
காலை 6 15, முரளியிடம் பேசி சிட்டிக்கு பதிலாக கண்டோன்மென்ட் போக முடிவானது, அதுவும் பின் பக்க நுழைவாயில். ட்ரெயின் பிடிக்க சான்சே இல்லை என தீர்மானித்தாலும் கடைசி வரை முயற்சிக்க ஆட்டோ டிரைவரும் சம்மதிக்க 6 30 கண்டோன்மென்ட் சர்க்கிளில், ட்ரெயின் பிளாட்பாரத்தில் நுழைந்து கொண்டிருந்தது.
ஆட்டோ பிளாட்பாரம் அருகே நிற்க ஓடிப் போய் எதிரேயுள்ள கதவு வழியாக உள்ளே நுழைந்த போது பெரு மூச்சு விட்டு திரும்பிப் பார்த்தபோது உறவினருக்கு ஆச்சர்யம். பறத்து வந்தேனா என கேள்விகள்...
அதற்குள்ளே நான் மனதளவில் பஸ்ஸில் போக முடிவு செய்திருந்தேன் மாற்று ஏற்பாடாக, ஆனால் நேரத்திற்குச் சென்றிருக்க முடியாது.

கருத்துகள் இல்லை: