சனி, 18 டிசம்பர், 2021

Jack of many subjects Master of none - part 1

 Jack of many subjects Master of none

சின்ன வயசுலே பள்ளிலே ஆசிரியைகளின் செல்ல மாணாக்கனாக இருந்ததால், நாடகங்களில பல வேடங்கள் தரித்து நடித்திருக்கிறேன். என்ன காரணத்தாலோ சக பள்ளி மாணாக்கனால் கல்லடியும் பட்டு காயப்பட்டிருக்கிறேன். டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள TELC பள்ளியே ஆரம்பக் கல்வி.
6 to 11 வரை MCC School, சேத்துப்பட்டு. முதலில் scout பிறகு NCC Army wing, நினைவில் நிற்பது பெரேட் முடிஞ்சு கொடுக்கிற பன்னும் லைம் ஜூசும். பன்னை ஜூசுலே முக்கி சாப்பிட்டா அவளோ டேஸ்ட். பல்லாவரம் ஃபைரிங் ரேஞ்சுலே .303 ரைபிள் சுட்டது நல்ல அனுபவம். ரீகாயில் தோள்பட்டையை சிலநேரம் பதம் பார்க்கும்.
பொன்னேரி என்சிசி கேம்ப் நல்ல அனுபவம். முத முதல்லே தனியா தங்கினது மட்டுமல்ல. கட்டுப்பாடான மிலிட்டரி டிரெயினிங். சாப்பாட்டுக்கு முந்தி சுடசுட சாப்பிட்ட அனுபவம். அப்பாவோட டிரெஸ் ரெடி பன்னியதும் ஷூ பாலிஷ் போட்டதும் என்சிசிக்கும் பயன்பட்டது. அது போட்டாலே ஒரு மிடுக்கு விறைப்பு வரும் நடைலே.
அதுலேயும் எக்சாம் வச்சு சர்டிபிகேட் உண்டு. A certificate. ஆர்மிக்கு பெரியசாமி வாத்தியார் தான் தலைமை. பள்ளி கல்லூரி வகுப்புத் தோழரான G சுரேஷ் பள்ளிலேயும் நேவிலே இருந்தான்னு நினைக்ககிறேன்.
புட்பால், ஹாக்கி வகுப்பு டீம்ல இடம் பெற்று ஹாஃப் பேக்கா ஆடினது, தாமஸ் தான் ஸ்போர்ட்ஸ் தலைவன், நம்ம சுந்தர்தாஸ் மாதிரியே பல விளையாட்டுலேயும் சிறப்பாக ஆடுவான். நேரம் கிடைக்குறப்பலாம் ஃபுட்பால் ஆடுவோம். அந்தக் காலத்துலே டென்னிஸ் கோச்சிங்லே எங்க ஸ்கூல் ரொம்ப ஃபேமஸ்.
பல தலைவர்கள் பசங்க எங்க பள்ளில படிச்சாங்க. நெடுஞ்செழியன்,கருணாநிதி, அனந்தநாயகி இப்படி பலரது பிள்ளைகள்.
ஸ்கூல்ல லைப்ரரிலே புக்ஸ் எடுத்துப் போகலாம். பாட புத்தகம் எடுத்ததில்லே, இராமாயாணம் ராஜாஜி எழுதினது, நா பார்த்தசாரதி, லஷ்மி இவர்களோட நாவல்கள்தான் கொண்டு போவேன். குமுதத்திலே வர எல்லா கதைகளும் ஓசிலே வாங்கி படிச்சுடுவேன். குமுதம் பத்திரிகையை பல லருடங்கள் விடாமல் தொடர்ந்து படித்திருக்கிறேன்.
PUC MCC தாம்பரத்திலே படிச்சப்ப NSS le சேந்து பக்கத்து கிராமங்களான கணபதிபுரம் முதலான இடங்கள்ளே சிறுவர்களுக்கு விளையாட்டுகள் நடத்தி பரிசுகள், சிற்றுண்டி முதலானவை கொடுத்தது நல்ல அனுபவம். அப்படி போறப்ப BSc படிச்சுட்டு இருந்த சுவர்ணலதான்ற பொண்ணு மேலே கிரஷ். கணகளிரண்டும் உம்மை என்று கண்டு பேசுமோ பாடலை அவ பாடறப்ப மெய்மறந்து கேப்பேன்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: