சனி, 18 டிசம்பர், 2021

அழகு !

 சிற்றுளி செதுக்கிய சிலையொரு அழகு

கற்றது கேட்டது கல்வியின் அழகு
பற்றது நீக்கிய முனிவரின் அழகு
கொற்றவன் ஆட்சியின் மேன்மை அழகு
நற்றமிழ் நாவினில் தவழுதல் அழகு
சொற்றொடர் சேர்ந்த பாடலின் அழகு
கற்றதன் புகழால் சான்றோர் அழகு
தொற்றிய கொடிதனில் மலரின் அழகு
பற்றிய மழலையின் கரங்கள் அழகு
சாற்றிய நீதியால் அரசுக்கு அழகு
போற்றிய பண்பு புலவர்க்கு அழகு
ஒற்றனின் துணிவு அரசுக்கு அழகு
வற்றிய வயிற்றுக்கு உணவே அழகு
ஏற்றம் இறைக்கும் உழவன் அழகு
சுற்றம் இருப்பின் உறவுக்கு அழகு
நாற்றது வளர நெல்மணி அழகு
பெற்றது நல்பெயர் மாணவர்க்கு அழகு
சொற்களின் செறிவு தமிழுக்கே அழகு !

கருத்துகள் இல்லை: