சனி, 18 டிசம்பர், 2021

வாழ்ந்த காலம்

 கொட்டும் மழையில் கைநனைத்த காலமது

கொஞ்சும் தாயவள் மடிமீது தலைவைத்து
பாரதக் கதைகள் செவிகளில் சேரும்
மரமதில் ஏறி மாங்காய் புளியோடு
மனதினில் மகிழ்வாய் நண்பர் குழுவோடு
திருடனாய் காவலனாய் ஒளிந்த காலமது
பட்டம் விட்டு பம்பரம் சுழற்றி
கட்டம் போட்டு சொக்கட்டான் ஆடி
தோழியரோடு கல்லும் பரமபதமும் விளையாடி
தோழரோடு இரவுக்காட்சி களித்த காலம்
சிறுவனாய் வாழ்ந்த காலம் நெஞ்சிலே
சிறகை விரித்து பறந்து போனது

கருத்துகள் இல்லை: