சனி, 18 டிசம்பர், 2021

Lockdown effect

நான் பொதுவாக தொலைக்காட்சி பார்ப்பதே அரிது. கண்கள் பாக்கலைன்னாலும் காதுகளை மூட முடியல்லே. இது நம்மில் பலருக்கு பழகி இருக்கலாம்.

பாரதி கண்ணம்மா வெண்பா பல மாதங்களா வில்லியா இருந்து பாரதியைக் கல்யாணம் பண்ணிக்க முடியலே. லஷ்மி ஹேமா ரெண்டும் தன் குழந்தைகனு கண்ணம்மாக்கு தெரியலே.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அஞ்சு லட்சத்துலே கார் வாங்க ஒரு மனசா தீர்மானிச்சாச்சு.
சந்தியா தான் படிச்சவனு மறைச்சதுக்கு பல கொடுமைகளுக்கு ஆளாகறா, சரவணன் அம்மாவ எதுத்து ஒண்ணும் பண்ண முடியலே. சந்தியா IPS ஆவாளா ?
செல்வி நாயகி் வெண்பாவுக்கு மாமியாரோட பிரச்னை, கணவனோட பிணக்கு.
பாக்யா அந்தக் காலத்து மனைவி கணவனுக்கு அடிமை. மிரட்டியே சாதிக்கற கணவன். வேடிக்கை பாக்கற அம்மா அப்பா.
இன்னொரு குடும்பத்துலே கொலைப்பழி் சுமந்த கணவன் மாறு வேஷத்துலே இன்னொரு பொண்ண வேற கல்யாணம் பண்ணிப்பான். அவன என்கவுண்டர் பண்ண ரெடியா போலீஸ் ஆபீசர்.
மாறன் நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானு மாமானாரும் அவரோட பொண்ணும் ரெண்டு்நாள் அழறாங்க.
இப்படி என் காதுகளில் வாங்கிய கதைகள் மட்டுமே இவ்வளோன்னா மொத்தமா எவ்வளவு கதைங்களோ தெரியாது.
எல்லா வில்லிகளுமே நம்ம எரிச்சல் மூட்டறாங்க. இரகசியங்க மாதக்கணக்குலே காப்பாத்தப்படுது.
ஊருக்கு உழைக்கும் பஞ்சாயத்து தலைவி புருஷன் கிட்டவே சேக்கலே. ஊர் பணத்த கொள்ளையடிச்ச மாமனார்.
இன்னொரு பக்கம் குக்குங்க கோமாளிங்களோட கும்மாளம். செஃப் தாமு கூட வேடிக்கை பாக்க.
பிரியங்கா, மா க ப விஜய் டிவி முழுக்க ரியாலிட்டி ஷோ.ஓவர் ஆக்டிங் மணிமேகலை.
கண்ணாலே ஓரிரு நிமிடங்களும் காதுகளால் பல நிமிடங்களும் ஆக்ரமிக்ற இந்தக் கிருமிங்களுக்கு மருந்து உண்டா ?

கருத்துகள் இல்லை: