சனி, 18 டிசம்பர், 2021

பெண்மைக்கு ஈடில்லை

 கண்ணிலொரு காந்தமுண்டு பெண்டிருக்கு என்றொரு மொழியுண்டு

விண்ணிலொரு தாரகைக்கு ஒப்பிட்டு பாடியதும் கவிஞர்தாமே
எண்ணிலடங்கா காவியங்கள் பெண்மை போற்றும் இன்றளவும்
பண்ணிசைத்துப் பாடுவதும் பரதங்கள் ஆடுவதும் நளினமொழியே
கண்ணசைவில் மன்னரெலாம் மயங்கிப் போயினர் வரலாறுகூறும்
நுண்ணுயிரும் பெண்ணினமே அழகென்று பறைசாற்றும் நூல்களெல்லாம்
எண்ணியது நாட்களெலாம் அவளழகை ஆண்மனது அடையவேண்டி
கண்ணியமாய் அவளருகே அடங்கிப் போகின்ற ஆண்மையது
விண்ணகமோ வானகமோ நிலவோ மலரோ குளிரோடையோ
பண்டைய நாள்முதலே பாட்டினிலே பெண்ணினத்தை குறித்தேயுண்டு
பண்புக்கு அன்புக்கு கருணைக்கு காதலுக்கு தாய்மைக்கு
பெண்மைக்கு ஈடில்லை என்பதிலே இருவேறு கருத்துண்டோ ?

கருத்துகள் இல்லை: