சனி, 18 டிசம்பர், 2021

கயிற்றுக் கட்டில்

 புறப்படு நண்பா பயணம் செய்வோம்

சிறப்பொடு வாழ்வு தேடிச் செல்வோம்
கடலென ஏரிநீரில் குளியல் முடிப்போம்
கடைத்தெரு சென்று காய்கறி கொணர்வோம்
மண்பானை கொண்டு உணவு சமைப்போம்
கண்மாயில் கால்நீட்டி கதைகள் பேசுவோம்
தாவணி அணிந்த தோழி வரட்டும்
தாயம் ஆடிட அவளும் சேரட்டும்
ஆட்டு மந்தை கொட்டடி சேர்ப்போம்
பாட்டுக் கட்டி நடனம் ஆடுவோம்
கயிற்றுக் கட்டிலில் உறக்கம் கொள்வோம்
களத்து மேட்டில் சிலம்பம் கற்போம்
தென்னை இளநீர் வெட்டிப் பருகுவோம்
தெருக்கூத்து மேடையில் வேடம் போடுவோம்
பசுமை வயல்களில் வலம் வருவோம்
பசுவின் பாலைக் கறந்து வருவோம்
மாசற்ற காலத்தை மறுபடி உணர்வோம்
காசுக்காய் அலையும் வாழ்வைத் துறப்போம்

கருத்துகள் இல்லை: