சனி, 18 டிசம்பர், 2021

சங்கமம் உண்டு

 எதையும் தொலைக்காத வாழ்க்கை உண்டா

எங்கே போகிறோம் என்பது தெரியுமா
புள்ளிகள் கோடுகள் ஆவதும் கோலம்தானே
புலன்கள் அடங்கும் காலத்தைக் கணிப்பதார் ?
ஆடுவதும் அடங்குவதும் ஆறடிக்கு உள்தானே
தேடுவதும் தெளிவதும் முடிவின் தொடக்கமா
வாடிய உள்ளங்கள் மறந்திடும் சிலநாளில்
மூடிய கண்ணுக்குள் முகங்கள் தோன்றிடுமோ
வந்ததும் போவதும் வட்டத்தின் சுழற்சியாலே
வெந்தது உடலன்றோ மிஞ்சிய எலும்புக்கரி
சங்கமம் உண்டு கரைந்திடும் கரையில்
சரித்திரம் ஆவதும் சாக்காட்டின் முடிவில்

கருத்துகள் இல்லை: