சனி, 18 டிசம்பர், 2021

காலமாற்றம்

 மேகம் குளிர்ந்து மழையெனப் பெய்ய

தேகம் நடுங்குது குளிரும் காற்றில்
காலைப் பனியில் நனைந்த புல்வெளி
கால்களை நனைத்து தூய்மை செய்தது
குயிலின் குரலொலி விடியல் அறிவித்தது
வெயிலின் தாக்கம் வெகுவாய்க் குறைந்தது
காடுகள் மீண்டும் பசுமை பூண்டது
காதலர் நெருக்கம் கதகதப்பு ஊட்டியது
கதிரவன் வரவை கார்மேகம் மறைத்தது
கருக்கல் இருளைத் தழுவியே விடிந்தது
காலமாற்றம் கண்ணுக்கு இனிமை சேர்த்தது
காசுக்காய் இவையில்லை கடமையைச் செய்தது
இயற்கை தருமிவை இலவசம் ஆனது
இறையவன் படைத்தது என்பதும் உண்மையோ !

கருத்துகள் இல்லை: