சனி, 18 டிசம்பர், 2021

ஆதங்கம்

 அவரவர் இடத்தில் இருந்து கொண்டாலே எல்லாம் சௌக்யம் கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.

அமைதியைக் குலைக்க காலங்காலமாய் ஏதாவதொன்று நடந்து கொண்டே இருக்கிறது. அதிகாரப் பற்று, மதப் பற்று, மொழிப் பற்று, பொறாமை ஏதாவதொன்றின் காரணமாக.
மற்ற நாட்டு கனிம வளங்களைச் சுருட்டல், ஓரினம் மற்ற இனத்தைக் கீழ்மைப் படுத்தல், நம்மைவிட அவன் உயர்ந்தானே என்ற எண்ணம் இவ்வாறாக பல்வேறு காரணங்கள்.
மனித இனம் தோன்றியது முதலே நடந்தபடி இருக்கிறது. இறைவனின் படைப்பிலே இது ஒரு குறையோ என எண்ணத் தோன்றுகிறது. அல்லது இயற்கையின் குறைபாடு இதுவென்று எண்ணத் தோன்றுகிறது.
மனிதனை மனிதனே அழிக்கும் அவலங்கள் பெருகி விலங்கினும் கீழான செயல்கள் பெருகி விட்டன. மற்றவனை அழித்தாவது தான் உயரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
தன்னலமற்ற தலைவர்கள் இல்லாத நிலையொன்றும் உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்றதொரு ஐயப்பாடு மனதில்.
அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் சமுதாயம் நல்ல நிலையில் உள்ளதா என்ற கேள்வி அனைவர் மனதில். ஆதங்கம் மனதில், அமைதியான உலகும் ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமுதாயமும் உருவாகுமா என்று.

கருத்துகள் இல்லை: