சனி, 18 டிசம்பர், 2021

மனித குலம்

 உழைக்காத எவனுக்கும் உயர்ந்த வாழ்க்கையில்லை

கொள்ளையடிப்பவன், கொலைகாரன்,திருடன், ஏமாற்றுபவன் இதிலடங் காது
உழவன் உழைக்காமல் உணவில்லை, இதுபோன்ற வாழ வழி செய்ய பலரின் உழைப்பு தேவை.
இறைவன் என்பவன் அனைவருக்கும் உகந்தவன். மனித குலம் உருவான போதும் இடமாற்றம் அடைந்த போதும் மொழிகள்,மதங்கள்,சாதிகள் தோன்றின.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என வேறுபாடுகள் தோன்றின. பணம் என்று ஒன்று வந்த போது அதை அடைய வழிகளை பலரும் பல வி்தங்களை கையாண்டனர்.
ஆணிவேர் ஒன்று தான், அது மனிதம். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் எத்தனை நாடகங்கள்.
சொல்வது எவர் காதிலும் விழுவதில்லை படித்தும் பயனில்லை. செவிடர்கள், குருடர்கள், ஊமைகள் தான் அனைவரும். காது,கண்,வாய் இருந்தும் பயனில்லை.
மாறுவர் என்பதெல்லாம் கனவே. நானும் விலகிப்போவேன், நீயும் விலகிப் போவாய். மாற்றம் இதில் மட்டும் வாராது என்பதே வருத்தமான ஒன்றாகி விட்டதே.
கால மாற்றம் இதற்கு விடையாகுமா ? எதிர்காலச் சந்ததியர் விடை காணட்டும்.
G Thirugnana Sundaram, Ram Manohar M D and 4 others
1 comment
Like
Comment
Share

கருத்துகள் இல்லை: