சனி, 18 டிசம்பர், 2021

நிழற்படங்கள்.

 குளிர் காற்று சன்னல் வழியாக நுழைந்து முத்தமிட்டது. சில்லென்ற காற்றுக்கு போர்வை தேடவா மனம் கேட்டது.

மேற்குத் தொடர்ச்சி மழையில் இப்போதே தென்மேற்குப் பருவம் தொடங்கியதா என ஐயம்.
கிழக்குக் கடற்கரையில் கதிரவனின் கண் சிமிட்டல். யாஸ் புயலுக்கு முன்னே அமைதியோவென.
பாக்குமர நிழலில் உட்கார்ந்து சிங்கையின் அழகிய தெருக்களை கேமராவில் காட்டிய வண்ணம் நடை பயிலும் நணபன்.
காலையில் தினம் தினம் கவிதையும் கூடவே கருத்துரைக்கும் விசயனும் சுந்தரமும்
நுண்ணுயிர் பல்லுயிரை பணயம் வைத்து விளையாடும் மகாபாரதம்.
மயிலைத் தேடி இரயிலில் பயணித்த சிவன். பசுமைப் போர்வையை பூமியில் போர்த்திய கிராமப் புறங்களின் நிழற்படங்கள்.
ஐம்புலன்களுக்கும் உணவாய் இவையில்லையெனில் காலம் கடப்பது எவ்வாறு

கருத்துகள் இல்லை: