சனி, 18 டிசம்பர், 2021

பற்றது துறக்க

 அறுபதைத் தாண்டி ஓடும் வாழ்க்கை

பெறுவது ஞானம் அனுபவ அறிவு
கற்றதும் கேட்டதும் கண்டதும் உணர்ந்ததும்
பற்றது துறக்க பழகிய காலமும்
வற்றிய குளத்துப் பறவைகள் என்பதாய்
சுற்றிய இடமெலாம் துறந்து நின்றது
நற்றமிழ் நாவினில் நர்த்தனம் ஆடியும்
சொற்றொடர் பாடல்கள் சோர்விலா நாட்களும்
பற்றுதல் வாழ்வினில் நாளொரு போதினில்
சாற்றுதல் எளிதாம் பழகுதல் அரிதாம்
கூற்றுவன் வரும்வரை ஆற்றிடும் பணியும்
நேற்றது செய்தது நாளையும் உதவிடும்
போற்றுக நல்லவை பொய்யது தவிர்க்க
போகட்டும் தீயவை உண்மையே வெல்லுமாம்

கருத்துகள் இல்லை: