சனி, 18 டிசம்பர், 2021

பாப்பாவுக்கு ஒரு பாட்டு

 பாப்பாவுக்கு ஒரு பாட்டு சொல்வோமா

பாரதி பாட்டு படிக்கச் சொல்வோமா
ஓடி விளையாடு ஓயாதே என்போமா
கூடி விளையாடு நல்லவை உரைப்போமா
மழலை மாறாத மொழிதனைக் கேட்போமா
மகளுக்கு மகளோ மகனுக்கு மகனோ
பேரனோ பேத்தியோ கொஞ்சி விளையாட
தத்தி நடைபோட்டு சுத்தி வருவாளே
புத்தி குறும்பு குறுநடை குதூகலம்
சத்தம் பலவாய் எழுப்பி அழைப்பானே
முத்தம் கேட்டாளே பச்சென்று கன்னத்தில்
மொத்த உலகமே அவளிடத்தில் காண்கிறதே
சுத்தி வருவோம் முதுகில் அமர்ந்திடு
முதுமை அறிவதில்லை அருகில்நீ இருப்பதனால்
வெறுமை போக்கும் தேவதையாய் என்னருகே

கருத்துகள் இல்லை: