சனி, 18 டிசம்பர், 2021

வகை வகையா உணவு

 அம்மா செஞ்ச பால் கொழுக்கட்டை

அதிரசம் சுறாப்புட்டு் அதிக ருசியே
ஆயா வீட்டு கேழ்வரகு வேர்க்கடலை உருண்டை
பெரியம்மா கைபக்குவ கத்தரிக்கா சாம்பார்
மாமா வீட்டு தேங்கா புண்ணாக்கு
நண்பனின் அம்மா செய்யும் இடியாப்பம்
அக்கா வீட்டு சீரகசம்பா பிரியாணி
பெங்களூர் பெரியம்மா தக்காளி சாம்பார்
நண்பன் வீட்டு மல்லிகை இட்லி
நான் சமைக்கும் மீன்குழம்பு இறாவறுவல்
கடற்கரைக் கடை பிரட் ஆம்லட்
ஆடிமாத கூழும் கருவாட்டு குழம்பும்
ஆப்பத்தோடு தேங்காய்ப் பால் சர்க்கரை
ரோட்டுகடை பரோட்டா பாயா பாய்லர்டீ
பெங்களூரு பிஸிபேளாபாத் மைசூரு ரோடு தட்டை இட்லி
மத்தூர்வடை பானிபூரி மசாலா பூரி
சென்னை பீச் பொரி கடலை மசாலா
கேரளத்து புட்டு கடலை கறி
வேரக்கடலை உருண்டை கரும்புச் சாறு
பனை நுங்கு பச்சை வேர்க்கடலை பச்சரிசி மாங்கா
இட்லி தேங்கா சட்னி உளுந்து வடை
வகை வகையா உணவு வயிற்றுக்கு
சுவையாக கொடுத்த தெய்வங்கள் வாழ்க

கருத்துகள் இல்லை: