சனி, 18 டிசம்பர், 2021

கண்மூடி உறங்கு

 ஆரடிச்சு நீ அழறே பாப்பா

ஆகாது உன் கண்ணுலே கண்ணீர்
ஆகாசம் பாத்தியா ஆயிரம் நட்சத்திரம்
ஆயாவும் வடசுடும் நிலாவப் பாரு
ஆத்தாவும் அப்பனும் தூங்காம இருக்காக
தாத்தாவும் பாட்டியும் ஏனழறான்னு கேக்காக
சமத்தா தூங்குவியா செல்லமே தங்கமே
தொட்டில் வேணாமா தோள்மேலே உறங்கணுமா
கட்டிலும் வேணாமா கட்டித் தங்கமே
நீயழும் நேரமெல்லாம் தாயழறா பாக்கலியா
நீசிரிச்சு பாக்கணுமே அப்பனும் ஆத்தாளும்
அழுதது போதும் கண்ணே அமைதியாகு
அம்மா மடியிலே கண்மூடி உறங்கு

கருத்துகள் இல்லை: