சனி, 18 டிசம்பர், 2021

அன்பும் பாசமும்

 பசுமை மாறாத வயல்கள் சமீபத்தில் பெய்த மழையில்

கிணறுகளில் நிரம்பிய நீர்
பதின்மூன்றாம் நாள் காரியம் முடித்து மீசை மழித்த பங்காளிகளில் ஒருவனாய்
வாழைத்தோட்டம் நெல்வயலாய் மாறி கண்களுக்கு குளிர்ச்சி.
மதிய உணவு எங்கே சாப்பிடுவது என்று யோசிக்கவே வேண்டாம். தூரத்து மாமன் வீட்டில் சென்றிருந்த அனைவருக்கும் சூடாய் சாம்பார் உருளைக்கிழங்கு வறுவல் அப்பளத்துடன் வாழையிலையில் ருசியான சாப்பாடு. கிராமத்துச் சமையலே தனிச் சுவை.
ஏன் கண்ணு இருந்து ரவைக்கு சாப்பிட்டு காலைல போலாமில்ல, பெரியம்மாவின் பெண், தங்கையின் அழைப்பு.
அன்போடு மறுப்புத் தெரிவித்த போது, எல்லாருக்கும் பகிர்ந்தளிக்க வேர்க்கடலையும், நிலத்தில் அப்போது பறித்த கத்தரிக்காய், தக்காளி வெவ்வேறு பைகளில்.
அன்பும் பாசமும் ஆண்டுகள் பலவானாலும் குறையாமல் பெற்றுக் கொண்டு இன்னமும் நகரத்து வாசனை நுழையாத மண் தெருவில் காரை ஓட்டியபடி, விடைபெற்றபோது மனம் சற்றே கணத்துத் தான் இருந்தது.

கருத்துகள் இல்லை: