சனி, 18 டிசம்பர், 2021

கார் போன போக்கிலே - 2

திண்டுக்கல் வேணு பிரியாணி தவறாமல் சாப்பிடுண்ணு நணபன் சிவராஜ் சொன்னதை ஏற்று, இரவென்றும் பாராமல் மட்டன் பிரியாணி வாங்கிவரச் சொல்லி சாப்பிட்டதை சொல்ல மறந்தேன். அது புரட்டாசி முதல் நாளில் பதிவிட வேண்டியதாயிற்று. காலைலே ரெடியாகி இட்லியும் தோசையும் சூடாகச் சாப்பிட்டு மலையேற ஆரம்பிச்சப்ப காலை ஒன்பது மணி.

வளைஞ்சு நெளிஞ்சு பதினெட்டு கொண்டையூசி வளைவுகளைக் கடந்து மேலே போய்ச்சேர அரை மணி நேரமே ஆச்சு. சிறுமலையை அடைஞ்சப்ப சின்ன கி்ராமம்,சிறிய தெரு. கோயிலும் மூடி இருந்தது.
அங்க இருந்த ஒரு சின்ன பெட்டிக் கடைலே குதிரை வால் சூப் ஆர்டர் பண்ணி குடிச்சிட்டு, மலை வாழைப் பழம் ஒண்ணு எட்டு ரூபாண்ணு வாங்கினப்ப இவ்ளோவாண்ணு தோணுச்சு. இந்த குதிரை வால் மலைப் பிரதேசங்கள்ளே மரத்திலே விளையற கிழங்கு, பார்ப்பதற்கு ஓர் ஆட்டுக்கால் மாதிரியும், சூப்பும் அப்படியே இருக்கும், மருத்துவக் குணம் கொண்டது.
மழை பெய்து இருந்ததாலே பசுமையான காப்பித் தோட்டம் தவிர வேற பாக்க அதிகமில்லை. மலைக்கிராமம் ஒண்ணு பாத்த திருப்தி. மலைப்பாதையைக் கடந்து ஓட்டலுக்குத் திரும்பினப்ப காலை பத்தரை.
அடுத்த பயண இலக்கு இராமேஸ்வரம். சீக்கிரமா கிளம்பினா இருட்டறதுக்கு முன்னாடி போகலாமுண்ணு பதினொன்னரைக்கு ஓட்டலைக் காலி செய்து பயணம் தொடங்கியாச்சு.
காரப் பயணம் சாலைகள் நன்றாகவே இருந்ததால் சுகமாகவே இருந்துச்சு. சுமார் ஐந்தேகால் மணிக்கு பாம்பன் பாலம் அடைஞ்சு போட்டோலாம் எடுத்து, ஓட்டல் போய்ச் சேருறப்போ மணி ஆறு.
ஓட்டல் கோயிலுக்கு அருகில் இருந்துச்சு. போன களைப்பு தீர குளிச்சு வேட்டி கட்டி கோயிலுக்குப் போய் தரிசனம் முடிச்சு வரப்ப இருட்டி விட்டது, கடலுக்குப் போக முடியலே. ஆனா அப்புறம் தான் சொன்னாங்க நல்ல வேளை நீங்க கோயிலுக்குப் போனது வெள்ளி முதல் திங்கள் வரை கோயில் கிடையாதுண்ணு. திங்கள் அமாவாசை அதனாலே கோயில் திறப்பதில்லையாம். சாமி தரிசனம் முடிச்சு மகிழ்ச்சியோட டிபன் ஆர்டர் பண்ணி ரூம்லேயே சாப்பிட்டு கணக்கெழுதி முடிச்சு, நண்பரோட வாட்சப்லே பேசி முடிச்சு, தொலைக்காட்சி சிறிது நேரம் பாத்துட்டு உறங்கப் போயாச்சு.
(நாள் இரண்டு)

கருத்துகள் இல்லை: